being created

பா. செயப்பிரகாசம்

From Tamil Wiki
Revision as of 03:22, 25 October 2022 by Tamizhkalai (talk | contribs)

பா. செயப்பிரகாசம் (1941 – 23 அக்டோபர் 2022) தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். அரசியல் கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தும் கதைகளை எழுதியவர். 'ஒரு ஜெருசலேம்', 'காடு' ஆகிய தொகுப்புகள் முக்கியமானவை. 'மனஓசை'இதழின் ஆசிரியர்களில் ஒருவர். சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் எழுதினார். 1965-ன் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் மாணவர் அணித் தலைவர்களுள் ஒருவர். தமிழக அரசின் செய்தித்துறை உயரதிகாரியாகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

1941-ல் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ராமச்சந்திராபுரத்தில் பிறந்தார். ஐந்து வயதில் தாயார் காலமானார். ஆரம்பக் கல்வியை தன் பாட்டியின் ஊரான அருப்புக்கோட்டைக்குப் பக்கத்தில் உள்ள சென்னம்மரெட்டிபட்டியில் பெற்றார்.

மதுரைத் தியாகராசர் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். மாணவப் பருவத்தில் 1965 -ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று இந்தியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (DEFENSE OF INDIA RULES) கைதாகி பாளையங்கோட்டைச் சிறையில் மூன்று மாதங்கள் சிறையிருந்த பத்து மாணவர் தலைவர்களில் ஒருவர்.

தனி வாழ்க்கை

1968 முதல் 1971 வரை கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றினார். 1971 முதல் தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணை இயக்குநராகப் பணியாற்றி 1999-ல் ஒய்வு பெற்றார். மனைவி மணிமேகலை. மகன் சூரியதீபன், மகள் சாருநிலா.







நூல்கள்

  • ஒரு ஜெருசலேம் - 1972, 1988
  • காடு - 1973
  • கிராமத்து ராத்திரிகள் - 1975
  • இரவுகள் உடையும் - 1978
  • மூன்றாவது முகம் - 1988
  • புதியன - 1997
  • இரவு மழை -1998
  • புயலுள்ள நதி (2001)
  • பூத உலா - 2003
  • கள்ளழகர் - 2006
  • இலக்கியவாதியின் மரணம் (2011)  Marina Books
  • காற்றடிக்கும் திசையில் இல்லை ஊர் (2014)  Vamsi, Marina Books, நூல் உலகம், பனுவல், Nithra Books, Namma Books
  • பா.செயப்பிரகாசம் கதைகள் (முழுமையான தொகுப்பு), சந்தியா பதிப்பகம் -
  • பா.செயப்பிரகாசம் கதைகள் - முதல் தொகுதி (2015)  Vamsi, Marina Books, நூல் உலகம், பனுவல், Discovery Book Palace
  • பா.செயப்பிரகாசம் கதைகள் - இரண்டாம் தொகுதி (2015)  Vamsi, Marina Books, நூல் உலகம், பனுவல், Discovery Book Palace
  • தாலியில் பூச்சூடியவர்கள்  
  • அக்னிமூலை (தேர்தெடுக்கப்பெற்ற கதை களஞ்சியம்)
  • முத்துக்கள் பத்து (பா.செயப்பிரகாசம் சிறுகதைத் தொகுப்பு)  Marina Books
  • மனஓசை கதைகள் (தொகுப்பாளர்)  
  • கூட்டாஞ்சோறு - 2019  
  • Invitation to Darkness - 2019


உசாத்துணை

பா. செயப்பிரகாசம் காலச்சுவடு நேர்காணல் உரையாடல் - பெருமாள் முருகன், தேவிபாரதி

கரிசக் காட்டுப் பூ... பா.செயப்பிரகாசம்-கீற்று இதழ்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.