மார்கரேட் லாட்ஜ்
மார்கரேட் லாட்ஜ் (1865-1920) ஆஸ்திரேலியாவில் இருந்து சேலத்திற்கும் ஈரோட்டுக்கும் வந்த மதப்பணியாளர். கல்வியாளர். சேலத்தின் ஆங்கிலக் கல்விக்கு அடித்தளமிட்டவர். ஆன்னி கிரவுச்சுடன் இணைந்து பணியாற்றினார்
பிறப்பு
ஆஸ்திரேலியாவில் செப்டெம்பர் 1865-ல் ஹோபார்ட் நகரில் பிறந்தார்
மதப்பணி
1889 முதல் சேலத்தில் லோய்ஸ் அன்ஸ்லீ காக்ஸ் அம்மையாருக்கு உதவிசெய்வதற்காக ஆன்னி கிரவுச் இந்தியாவில் சேலத்திற்கு வந்து கல்விப்பணியாறறினார். 1891-ல் லோய்ஸ் அன்ஸ்லீ காக்ஸ் அம்மையார் தொற்றுநோயில் மாண்டார். ஆன்னி கிரவுச் தன் தோழியான மார்கரேட் லாட்ஜையும் அழைத்தார். 1892 மார்க்கரேட் லாட்ஜ் சேலம் வந்தார். ஆன்னி கிரௌச், மார்க்கரேட் லாட்ஜ் இருவரும் 1893 ஆண்டு சேலம் அஸ்தம்பட்டியில் தனது சொந்த பணத்தில் இடம் வாங்கி பங்களா கட்டி கல்விப்பணியை தொடர்ந்தார்கள். இதனருகே பெண்கள் விடுதியும், பகல் நேர பள்ளி கூடமும் கட்டப்பட்டு அதற்கு மறைந்த சகோதரி லோய்ஸ் அன்ஸ்லீ காக்ஸ் அம்மையாரின் நினைவாக 'சகோதரி லோய்ஸ் காக்ஸ் நினைவு பெண்கள் பள்ளி மற்றும் தங்கும் விடுதி' என பெயரிட்டனர். தற்போது சி எஸ் ஐ ஹோபார்ட் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து உள்ளது. 1915 ஏப்ரலில் மார்கரேட் லாட்ஜ் ஈரோட்டிற்குச் சென்று 1917 மே வரை ஈரோட்டில் பெண்களுக்கு கல்வி முன்னேற்றத்தை வழங்க உழைத்தார். .
மறைவு
மார்க்கரேட் லாட்ஜ் 1920-ல் ஈரோட்டில் மறைந்தார்.
உசாத்துணை
✅Finalised Page