under review

பொதும்பில் புல்லாளங் கண்ணியார்

From Tamil Wiki
Revision as of 07:50, 12 October 2022 by Tamizhkalai (talk | contribs)

பொதும்பில் புல்லாளங் கண்ணியார், சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல்  சங்கத் தொகை நூலான  அகநானூற்றில் 154- ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் என்பதில் பொதும்பில் என்பது புலவரின் ஊர். புல்லாளம் என்பது இவர் கண்களிலிருந்த புல் போன்ற வரிக் கோடுகளைக் குறிப்பதாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் இயற்றிய  ஒருபாடல் சங்கத் தொகை நூலான அகநானூறின் 154- வது பாடலாக இடம் பெற்றுள்ளது.

பாடலால் அறியவரும் செய்திகள்

அகநானூறு 154
  • முல்லைத்திணை பாடல்
  • போர்வினை முடிந்து மனை திரும்பும் தலைவன் தன் தேர்ப்பாகனிடம் சொல்வதாக உள்ள பாடல்
  • பகுவாய்த் தேரை;  மழை பொழிந்ததால் தவளை பல இசைக்கருவிகள் முழங்குவது போலக் கறங்குகிறது (ஒலிக்கிறது).
  • பிடவம் பூக்கள் நுண்மணல் போல் வழியெங்கும் வரிவரியாக வரித்துக் கிடக்கின்றன.
  • பாம்பு படமெடுப்பது போல கோடல் பூ பூத்திருக்கிறது.
  • இரலைமான் ஊற்றோடும் அறல்நீரைப் பருகித் தன் துணையோடு படுத்துக்கிடக்கிறது.
  • நம் தேரில் பூட்டிய குதிரை ஓடும் மணியோசை காடு முழுவதும் கேட்கும்படி தேரை ஓட்டுக!

பாடல் நடை

அகநானூறு 154


படு மழை பொழிந்த பயம் மிகு புறவின்
நெடு நீர் அவல பகுவாய்த் தேரை
சிறு பல் இயத்தின் நெடு நெறிக் கறங்க,
குறும் புதற் பிடவின் நெடுங் கால் அலரி
செந் நிலமருங்கின் நுண் அயிர் வரிப்ப,
வெஞ் சின அரவின் பை அணந்தன்ன
தண் கமழ் கோடல் தாது பிணி அவிழ,
திரி மருப்பு இரலை தௌ அறல் பருகிக்
காமர் துணையொடு ஏமுற வதிய,
காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி;
ஓடுபரி மெலியாக் கொய்சுவற் புரவித்
தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப
ஊர்மதி வலவ! தேரே சீர் மிகுபு
நம் வயிற் புரிந்த கொள்கை
அம் மா அரிவையைத் துன்னுகம், விரைந்தே.

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.