being created

நரிவிருத்தம்

From Tamil Wiki
Revision as of 08:37, 16 October 2022 by Tamizhkalai (talk | contribs)

நரிவிருத்தம் சீவக சிதாமணியின் ஆசிரியர் திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட நூலாகும். நரிவிருத்தம் என்பது நிலையாமை கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும். இது 6-7-ஆம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்டது. "திருஞான சம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைக் குறிப்பிடுகிறார்:

ஆசிரியர்

நரிவிருத்தத்தை இயற்றியவர் திருத்தக்க தேவர். எழுதப்பட்டது. இளமையிலேயே ஆசிரியரையடுத்து வடமொழியிலும்‌ தென்‌ "மொழியிலும்‌ மிக்க பாண்டித்திய முடையராய்த்‌ தம்‌ அருகமத நூல்களை யெல்லாங்‌ கற்றுத்‌ துறவு பூன்டு தம்‌ ஆசிரியருடனே யிருந்து அவர்‌ கருத்தின்படியே நடந்து கடைச்சங்கம்‌ நடைபெற்ற காலத்தில்‌ ஒருசமயம்‌ அவருடன்‌ மதுரைக்குச்சென்று சங்கப்‌ புலவரோடு பழகி வந்தனர்‌, அப்போது ஒருநாள்‌ சங்கப்புலவர்‌ தேவரை நோக்கி, **அருகசமயப்புலவர்‌ துறவு நூல்களைப்பாடும்‌ திறம்‌ பெற்றிருக்கின்றனரே யன்றிச்‌ சிற்றின்பச்‌ சுவை பொருந்திய நூலைப்பாடுற்‌ திறம்பெற்றாரில்லை,*? என்று சொல்ல, தேவர்‌, **“ஜைனர்‌ சிற்றின்பச்‌ ௬வையை வெறுத்துத்‌ தள்ளினரேயன்‌றிப்‌ பாடத்‌ தெரியாமல்‌ தள்ளவில்லை,?? யென்று கூறினார்‌. அதைக்‌ கேட்டுச்‌ சங்கப்புலவர்‌, **அங்ஙனமாயின்‌ நீரே சிற்றின்பச்‌ சுவை பொருந்திய ஓரு நூலை இயற்றி எங்கட்குக்‌ காட்டுவீராக,"? என, உடனே தேவர்‌ இசைந்து தம்‌ ஆசிரியரிடம் அனுமதி வேண்டினார். ஆசிரியர் அவரைச் சோதிக்க வேண்டிஅங்கே ஓடிய நதியைக் காட்டி நரியோட, அதனை அவருக்குக்‌ காட்டி, “Obs நரிக்குலத்தின்‌ இயற்கையை ஆதாரமாக எடுத்துக்‌ கொண்டு நும்‌ மனத்திற்‌ ரோன்றியபடி ஒரு சிறிய நூலியற்றுவீராக,* என்று கூறினர்‌. தேவர்‌ அங்ஙனமே அதனை ஆதாரமாகக்‌ கொண்டு? தேகம்‌ செல்வம்‌ முதரியனவெல்லாம்‌ நிலையற்றனவென்பது தெளி வாசு விளங்கும்படி விரைவில்‌, *நரிவீருத்தம்‌,” என்னும்‌ இந்நூலை இயற்றிக்‌ காட்டினர்‌. ஆசிரியர்‌ இதனைப்பார்த்து மகிழ்ந்து பின்னர்‌ ஜீவகனுடைய கதையை, காவியமாகப்‌ பாடும்படி உத்தரவளிக்க அவர்‌ அங்ஙனமே அதனைப்‌ பாடிப்‌ புகழ்‌ பெற்றனர்‌.

நூல் அமைப்பு

இ·து ஓர் நீதிக்கதைகளை புகல் நூல் மட்டும் அல்லாது நீதி உரைக்கும் நூலாகவும் காண்கின்றது. முதல் 9 பாடல்களில் (2>>>10) காணும் ஓர் நரிபற்றிய கதை வருமாறு. ஓர் வேடன் தன் புலத் தினை விளைவை மேய வந்த யானையைக் கொல்லுவதற்கு பாம்பு வாழும் ஓர் புற்றின் மேலிருந்து கைவில் கொண்டு கணை எய்ய, பாம்பு அவனைத் தீண்ட, அவன் கீழே வீழ்ந்த உடன், தன் கை வாளால் பாம்பினைத் துணிக்க, அப்பக்கம் வந்த நரி ஒன்று இறந்து பட்ட 3 உடல்களைக் கண்டு, மகிழ்ந்து, இவை 6 திங்கள் 7 நாட்கள் 1 நாள் என இரை ஆகும் எனக் கணக்கிட்டுக் கொண்டே, இப்பெரு தொகுதியாலும் ஆசை அறாமல், விடமேறி இறந்த வேடன் கையில் பூட்டி இருந்தபடியே உள்ள வில்/கணையிலிருக்கும் ஒன்றினுக்கு ஆசைப்பட்டு, அதனைக் கவ்வ, கணை தெறித்து தொண்டையில் அகப்பட்டு அதுவும் இறந்தது. ஆக 'பேராசை கொள்ளல்' எனும் கருத்து பஞ்சதந்திரக்கதைபோல் காண்கின்றது.

பாடல் 11 இல் வேறொரு நரியின் கதை காண்கின்றது பெருவழி இரை தேடி சென்ற நரி ஒன்று ஓர் போர்ப் படை களம் இறங்க இருக்க கண்டு தான் இறந்தது போல் கிடந்தால் மடிந்து விழ்ந்து இறந்த பற்பலர் உடல் பலநாள் இரையாகுமே என்றெண்ணி கண்முடிக் கிடக்க அங்குவந்த ஓர்வீரன் இறந்துபட்ட நரியின்தோல் கேடயத்திற்கும், வாலும் செவியும் வேறு விதமாக பயன்படுமே என்று அந்நரியினைக் அறுத்தெடுக்க அது இறந்து பட்டது. இதனிலும் அவ்வகை 'பேராசை' நீதியே காட்டப்பட்டது

பதிப்பு

*நரிவிருத்தம்‌* மூலம்‌ மட்டும்‌ முதலில்‌ அச்சிடப்பட்டதாகத்‌ தெரிகிறது. பிறகு 1907ஆம்‌ ஆண்டில்‌ திரு. மு, இராகவையங்கார்‌ அரும்பத உரையுடன்‌ இந்நாலை வெளியிட்டுள்ளார்‌.













🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.