standardised

க. இராமலிங்கம்

From Tamil Wiki
Revision as of 22:30, 6 October 2022 by Tamizhkalai (talk | contribs)

க. இராமலிங்கம் ( நவம்பர் 8, 1880- ஜூன் 14,1953) ஈழத்து தமிழ் சைவ அறிஞர், எழுத்தாளர், நாடக நடிகர். நாடக அரங்காற்றுகை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

க. இராமலிங்கம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சரசாலையில் கந்தையா பிள்ளை, தங்கமுத்து இணையருக்கு நவம்பர் 8, 1880-ல் பிறந்தார். இளமையில் உரையாசிரியர் ம.க. வேற்பிள்ளை அவர்களின் திண்ணைப் பள்ளியில் தமிழும், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் ஆங்கிலமும் கற்றார். நீராவியடியில் அக்காலத்தில் வாழ்ந்துகொண்டிருந்த வேதாரணியம் ஐயாசாமிக் குருக்களிடம் இசைக்கலை பயின்றார். புத்துவாட்டிச் சோமசுந்தரம் அவர்களிடம் முறையாகப் பயின்றார்.

சைவப் பாடசாலை

”மட்டுவில் வடக்கு கமலாசனி வித்தியாசாலை” என்னும் சைவப் பாடசாலை இவரது முயற்சியால் உருவானது.

நாடக வாழ்க்கை

க. இராமலிங்கம் நண்பர்களுடன் இணைந்து பல நாடகங்களில் நடித்தார். யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்ட சரஸ்வதி விலாச சபையில், 1914-ஆம் ஆண்டு தொடங்கி 25 ஆண்டுகள் வரை நாடக அரங்காற்றுகை செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

க. இராமலிங்கம் "நமசிவாயம் அல்லது நான் யார்?" என்ற சமய நாடக நூலை இயற்றினார். பல பாடல்களும் கீர்த்தனைகளும் இவரால் இயற்றப்பட்டன. இப்பாடல்கள் பதிப்பிக்கப்படவில்லை.

மறைவு

க. இராமலிங்கம் அவர்கள் ஜூன் 14, 1953-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • நமசிவாயம் அல்லது நான் யார்?

உசாத்துணை

  • ஈழநாட்டின் தமிழ்ச் சுடர்மணிகள்: தென் புலோலியூர்: மு. கணபதிப் பிள்ளை


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.