under review

சா. கிருஷ்ணமூர்த்தி

From Tamil Wiki
Revision as of 17:44, 25 December 2025 by Jayashree (talk | contribs)
சா. கிருஷ்ணமூர்த்தி

சா. கிருஷ்ணமூர்த்தி (சா. கிருட்டிணமூர்த்தி; முனைவர் சா. கிருஷ்ணமூர்த்தி; டாக்டர் சா. கிருஷ்ணமூர்த்தி) (பிறப்பு: மார்ச் 31, 1951) நாடக நடிகர். கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சா. கிருஷ்ணமூர்த்தி, மார்ச் 31, 1951 அன்று, அன்றைய தென் ஆற்காடு மாவட்டம் (இன்றைய கடலூர் மாவட்டம்), சிதம்பரம் வட்டத்தில் உள்ள வளையமாதேவியில், மு. சாமிநாதன் - ஜானகி இணையருக்குப் பிறந்தார். எம்.ஓ.எல்., பி.எட்., பிஎச்.டி. முதலான பட்டங்களைப் பெற்றார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

நாடக வாழ்க்கை

சா. கிருஷ்ணமூர்த்தி பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் போது பல நாடகங்களில் நடித்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் இராசு இயக்கிய 'பாதுகாவலர்' நாடகத்தில் சிலை மற்றும் நடிகன் பாத்திரங்களில் நடித்தார். மு. இராமசாமி இயக்கிய 'ஸ்பார்ட்டக்ஸ்' நாடகத்தில் நடித்தார்.

மதிப்பீடு

சா. கிருஷ்ணமூர்த்தி கல்லூரி ஆசிரியராகவும், நாடகக் கலைஞராகவும் அறியப்படுகிறார்.

உசாத்துணை

  • நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.

‎


✅Finalised Page