விறலி கேட்பத் தோழி கூறல்(பெருந்திணை)
விறலி கேட்பத் தோழி கூறல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று.பரத்தை கூறியதற்குப் பதில் போல விறலி கேட்கத் தோழி கூறுதல்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் விரும்பிய பரத்தையர்களது தழுவுதலைப் பெறுதல் தலைவனுக்கு அரிய அமுதத்தோடு ஒக்கும் என விறலியிடம் தோழி கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
பேணிய பிறர் முயக்கு ஆரமுது அவர்க்கு என
பாணன் விறலிக்கு பாங்கி மொழிந்தன்று(கொளு 17.13)
வெண்பா
அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்பொடு
அதிரும் புனல் ஊரற்கு ஆர்அமிர்தம் அன்றோ
முதிரும் முலையார் முயக்கு (337)
பொருள்: அரும்பிற்கு, மலர்ந்த பூவினது வாசம் உண்டா? விறலியே! நீர்வளம் மிக்க ஊரின் தலைவனுக்கு முதிர்ந்த மார்புகளைக் கொண்ட பெண்களைத் தழுவுதல் என்பது அமுதம் சுவைப்பது போன்றதல்லவா!
தலைவியின் சிறப்பு பரத்தையிடம் இல்லை என்பதை ‘அரும்பிற்கும் உண்டோ அலரது நாற்றம்’ என்ற அடியால் புலப்படுத்துகிறாள் தோழி.
உசாத்துணை
பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.