under review

தூது இடை ஆற்றல்(பெருந்திணை)

From Tamil Wiki
Revision as of 18:33, 31 July 2025 by Logamadevi (talk | contribs)

தூது இடை ஆற்றல் புறப்பொருளில் அமைந்த பெருந்திணையின் துறைகளில் ஒன்று. இருபால் கூற்றாக அமைந்தது. தோழி தலைவனிடல் பெருந்திணைக் காதல் கொண்ட தலைவிக்காகத் தூது செல்வதைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் காதலில் ஏங்கும் தலைவிக்கு மாலைக்காலம் ஊழி போல் தோன்றித் துன்புறுத்த அதனைப் பார்த்த தோழி தலைவனிடத்தே தூது செல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

ஊழி மாலை உறுதுயர் நோக்கித்
தோழி நீங்காள் தூது இடை ஆடின்று(கொளு 17.3)

வெண்பா

வள் வாய்ந்து பண்ணுக திண்தேர் வடிக்கண்ணாள்
ஒள்வாள்போல் மாலை உயல் வேண்டும் - கள்வாய
தாதொடு வண்டு இமிரும் தாம வரைமார்ப
தூதொடு வந்தேன் தொழ (327)

பொருள்: வண்டுகள் மொய்க்கும் மாலை அணிந்த மலைபோன்ற மார்பனே! உன்னை வணங்கித் தூதுரைக்கின்றேன் ; இந்த வாள் போன்ற மாலை வேளையிடமிருந்து தலைவி பிழைக்க வேண்டும். உன் தேரினைச் செலுத்துவாயாக.

உசாத்துணை

பெருந்திணை (புறவியல்), தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page