under review

கிணை நிலை

From Tamil Wiki
Revision as of 16:05, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

கிணை நிலை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று.கிணைப்பறை கொட்டிப் பாடுபவன் (பொருநன்) செயலைக் கூறுவது கிணை நிலை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் நல்ல கிணைப் பறையைக் கொட்டுபவன், மருத நிலத்தில் உழுது தொழில் செய்யும் வேளாளனுடைய நல்ல புகழினைச் சொல்லுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

தண்பணை வயல் உழவனைத்
தெள்கிணையவன் திருந்து புகழ் கிளர்ந்தன்று(கொளு 8.32)

வெண்பா

பகடு வாழ்க என்று பனிவயலுள் ஆமை
அகடுபோல் அங்கண் தடாரித் - துகடுடைத்துக்
குன்றுபோல் போர்வில் குரிசில் வளம்பாட
இன்று போம் எங்கட்கு இடர் (186)

பொருள்: வேளாளனுடைய கடமை பிறர் பசி தீர்ப்பது. அப்புகழைப் பொருநன் பாடுகிறான் : குளிர்ந்த கழனியுள் ஆமையினது வயிறு போன்ற நடுப்புறத்தைக் கொண்ட (கண்ணையுடைய) கிணைப் பறையினைத் துடைத்து, ‘ஏர் வாழ்க' என்று வாழ்த்தி, குன்று போன்ற வைக்கோற் போரினை உடமையாகக் கொண்ட வேளாளனின் செல்வ வளத்தைப் பாடிய உடனே எம் வறுமை அகன்றுவிடும்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Jul-2025, 10:23:44 IST