under review

வாணிக வாகை

From Tamil Wiki
Revision as of 19:00, 30 July 2025 by Logamadevi (talk | contribs)

வாணிக வாகை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வாகையில் அரசர்கள் பற்றிய செய்திகளோடு, பிறர் பற்றிய செய்திகளும் கூறப்படுகின்றன. வாணிகரது சிறப்பைக் கூறுவது வாணிக வாகை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் நெறியற்ற செயல்களைச் செய்ய நாணுகிற வாணிகருடைய அறுதொழில்களை வெற்றிகரமாகச் செய்தலைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

செறு தொழிலில் சேண் நீங்கியான்
அறுதொழிலும் எடுத்து உரைத்தன்று(கொளு 8.10 )

வெண்பா

உழுது பயன் கொண்டு ஒலிநிரை ஓம்பிப்
பழுதுஇலாப் பண்டம் பகர்ந்து - முழுது உணர
ஓதி அழல் வழிபட்டு ஓம்பாத ஈகையான்
ஆதி வணிகர்க்கு அரசு (164)

பொருள்: நிலத்தை உழுது அதன் பயனாகிய விளைபொருளைக் கைக் கொண்டும், ஆரவாரிக்கும் ஆனிரையைப் பாதுகாத்தும், குற்றமில்லாத பண்டங்களை விற்றும், கற்றற்குரியவற்றை முற்றும் கற்றும், முத்தீயினை வழிபட்டும் தன் பொருளைச் சீர்தூக்காது வழங்கும் வண்மையினை உடைய வாணிகன் , முதன்மை வணிகர்க்கெல்லாம் அரசன் ஆவான்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page