being created

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்

From Tamil Wiki
Revision as of 10:02, 11 September 2022 by Tamizhkalai (talk | contribs)

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம் தஞ்சை சரபோஜி மன்னரைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இயற்றப்பட்ட குறவஞ்சி நூலாகும். தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் நிகழ்த்துகலையாக நடிக்கப்பட்டு வந்தது. தற்போது பா. ஹேரம்பநாதனால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

பார்க்க : சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

நிகழ்த்து கலை

தஞ்சையைச் சேர்ந்த நட்டுவனார் கே.பி. கிட்டப்பா பிள்ளை ( தஞ்சை நால்வர் சகோதரர்களில் ஒருவரான பொன்னையா பிள்ளையின் மகன்) முதன்முதலில் 1940ல்-ல் சரபேந்திர பூபாலக் குறவஞ்சியை சென்னையில் நாட்டிய நாடகமாக இயக்கி அரங்கேற்றினார். அதன்பின் நடனக் கலைஞர் பாலசரஸ்வதி கிட்டப்பா பிள்ளையின் உதவியுடன் இணைந்து அரங்கத்தில் நிகழ்த்தினார். கே.பி. கிட்டப்பா பிள்ளையின் மாணவரும், தஞ்சை நால்வர் எனப் புகழ்பெற்ற நட்டுவனார்கள் சின்னையா, பொன்னையா, சிவானந்தம், வடிவேலு ஆகியோரின் வழிவந்தவருமான ராஜாமணியின் குடும்பத்தினர் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் மன்மதநாடகம் மற்றும் சரபேந்திர பூபாலக் குறவஞ்சியை அரங்கேற்றினர். 1946 வரை ஒவ்வொரு வருடமும் பிரம்மோற்சவத்தின் போது அஷ்டகோடி தினத்தன்று தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் மாலை 7 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நடைபெற்றது.


உசாத்துணை

  • சரபேந்திர பூபாலக் குறவஞ்சி-தமிழ் இணைய கல்விக் கழகம்
  • Sarabhendra Bhūpala Kuravānji Nātakam
  • தமிழ்க்கனல்-சரபேந்திர பூபாலக் குறவஞ்சி




🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.