under review

தலைத்தோற்றம்

From Tamil Wiki
Revision as of 01:04, 28 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வெட்சித்திணையின் துறைகளில் ஒன்று. ஆநிரையைக் கவர்ந்த வெட்சி வீரர்கள் தம்மை எதிர்பார்த்து நிற்பவர் மகிழும்படி ஊரின் அருகே தோன்றுவதைக் கூறும் துறை.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் வெட்சி மறவன் ஆநிரைகளைக் கைப்பற்றிக் கொண்டு வருவதை அறிந்து அவனுடைய சுற்றத்தினர் மகிழ்ந்ததை மொழிவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

 உரவெய்யோன் இனம்தழீஇ வரவு உணர்ந்து
கிளைமகிழ்ந்தன்று(கொளு 1.15)

வெண்பா

மொய் அணல் ஆன்நிரை முன்செல்லப் பின்செல்லும்
மைஅணல் காளை மகிழ்ந்துடி - கைஅணல்
வைத்த எயிற்றியர் வாள்கண் இடன் ஆட
உய்த்தன்று உவகை ஒருங்கு (12)

பொருள்: செறிந்த அலைதாடியினை உடைய ஆநிரைகள் முற்பட்டுச் செல்லப் பின்னாக அவற்றைப் பேணிச் செல்வோனான கறுத்த தாடியினையுடைய காளையானவன், மகிழ்வுடன் முழக்கும் துடியொலி, தம் கணவரின் பிரிவினால் கவலை கொண்டு கன்னத்தில் கை வைத்திருக்கும் வேட்டுவிச்சியரது வாள்போன்ற கண்கள் இடமாகத் துடிக்க பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

உசாத்துணை

நொச்சித் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-Mar-2025, 10:01:32 IST