being created

ராணி திலக்

From Tamil Wiki

ராணி திலக் (ஆர்.தாமோதரன்;பிறப்பு : 1972) தமிழ்க்கவிஞர், கவிதை விமரிசகர். 1997 முதல் தமிழ் சிறுபத்திரிகை சூழலில் மிகத் தீவிரமாக இயங்கி வருபவர்.

பிறப்பு, கல்வி

ஆர். தாமோதரன் 1971-ல் பிறந்தார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கும்பகோணம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசுமேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

1997-ல் தொடங்கி 2005 வரை எட்டுவருட காலத்தில் எழுதிய கவிதைகளின் தொகுப்பான 'நாகதிசை' வெளியாகியது. 'ஸங்கரகாந்த்', 'தனுஷ்' ஆகிய புனைப் பெயர்களில் சில சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

கவிதை விமர்சன நூலான  சப்த ரேகை [ அனன்யா பிரசுரம்] வெளியாகியது.

இதுவரை ஆறு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளது. "சப்தரேகை" என்னும் தலைப்பில் கவிதை பற்றிய கட்டுரைகள் தனி நூலாக வெளிவந்துள்ளது. இவரது படைப்புகளுள் சில சிறுகதைகளும் பல கவிதை விமர்சனங்களும் அடங்கும். மணிக்கொடி கால எழுத்தாளர்களான "கரிச்சான்குஞ்சு" மற்றும் "கொனஷ்டை" ஆகியோரின் சிறுகதைகளை தொகுத்துள்ளார். தற்போது மேலும் சில மணிக்கொடிகால எழுத்தாளர்களின் படைப்புகளை தொகுக்கும் பணியில் உள்ளார்.

படைப்புகள்

  • கராதே
  • பிளக் பிளக் பிளக்
  • 27 கவிதைகள்,
  • நாகதிசை,
  • சொற்கள்
  • விதி என்பது இவைதான்
  • நான் ஆத்மாநாம் பேசுகிறேன்


உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.