being created

விநாயகர் அகவல்

From Tamil Wiki
Revision as of 20:59, 23 October 2022 by Tamizhkalai (talk | contribs)

விநாயகர் அகவல் என்னும் நூல் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. விநாயகர் அகவல் என்னும் இந்நூல், விநாயகப் பெருமானின் அருள்வேண்டி அப்பெருமானை அழைத்துப் போற்றித் துதித்து ஆசிரியப்பாவில் இயற்றப்பட்ட பாடல் ஆதலால், இப்பெயர் பெற்றது.


நூல் வரலாறு

விநாயகர் அகவல் இயற்றப்பட்டதற்கான காரணமாகப் பின்வரும் தொன்மக் கதை வழங்குகிறது.

சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமான் நாயனாரும் கயிலைக்குச் செல்லும்போது ஒளவையாரையும் அழைத்தனர். அவர் அப்போதுதான் விநாயகர் பூசையைச் செய்யத் தொடங்கியிருந்தபடியால், விரைவாக வழிபாட்டை முடிக்கலாயினார். அதை அறிந்த விநாயகப்பெருமான், “ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம். அவர்களுக்கு முன்னதாக நின்னைக் கயிலையில் சேர்த்துவிடுகிறேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க” என்றார். ஒளவையாரும் விநாயகரின் ஆணைப்படியே பூசையை இனிது முடித்தார். “சீதக் களப” என்று தொடங்கும் விநாயகர் அகவல் பாடி அப்பெருமானை மனம் கனிந்து துதித்துப் போற்றினார். ஒளவையின் தமிழால் உள்ளம் மகிழ்ந்த விநாயகப்பெருமானும், உலகெங்கும் வியாபித்த பேருருவை எடுத்து நின்று, ஒளவையாரைத் தம் துதிக்கையால் தூக்கிக் கயிலையில் சேர்த்தார். தங்கட்குமுன் கயிலாயத்தில் ஒளவையார் வந்திருப்பதைப் பார்த்த சேரமான் நாயனார், ‘அஃது எப்படி?’ என்று ஒளவையாரிடம் கேட்டபோது, இவ்வாறு பாடி விடை அளித்தார்:

மதுர மொழிநல் உமையாள் சிறுவன் மலரடியை

முதிர நினையவல் லார்க்குஅரிதோ முகில்போல் முழங்கி

அதிர வருகின்ற யானையும் தேரும் அதன்பின்சென்ற

குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே.

பொருள்: “உயர்ந்த சேரர்குடியில் பிறந்த மன்னனே! இனிய சொற்களைப் பேசும் உமையம்மையாரின் மகனாகிய விநாயகப் பெருமானின் திருவடிகளை வணங்குபவர்களுக்கு எந்தச் செயலும் செய்வதற்கு அரியது ஆகாது. ஆதலால் நான் இங்கு வந்திருப்பது அரியதன்று. நிலம் அதிரச் செல்லும் யானையும் தேரும் அதற்குப் பின்னர்ப் புறப்பட்டு வந்த குதிரையும் நாழிகை ஒன்றுக்கு காதவழி நடக்கும். நடக்க இயலாத கிழவியாகிய நானும் நடந்து வந்தது காத வழியே ஆகும்”.[1]

பாடல் அமைப்பு

விநாயகர் அகவல் 72 அடிகளைக் கொண்டதாக, அகவற்பாக்களினால் ஆனது. விநாயாகப் பெருமானின் தோற்றம், யோகத்தில் மூச்ச்சை நிலைநிறுத்துதல் போன்ற செய்திகள் சொல்லப்படுகின்றன.

விநாயகப் பெருமான் தோற்றம்

  • யோகாசன மூச்சுப் பயிற்சி

முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.




உசாத்துணை

விநாயகர் அகவல் பாடல் விளக்கம்-இமயவரம்பன்

அடிக்குறிப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

  1. இந்நிகழ்வை , பகழிக் கூத்தர் அருளிய திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்னும் நூலும் இவ்வாறு குறிப்பிடுகிறது. கருணையின் வழிபடு முதியவள் தனை,உயர் கயிலையின் ஒருமுறை உய்த்த விதத்தினர்