being created

எம். ஆர். ஜம்புநாதன்

From Tamil Wiki
Revision as of 23:15, 24 August 2022 by ASN (talk | contribs) (Para Added)
எம். ஆர். ஜம்புநாதன்

எம். ஆர். ஜம்புநாதன் (மணக்கால் ராமசாமி ஜம்புநாதன்; 1896-1974) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர் எனச் செயல்பட்டவர். தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகள் அறிந்தவர். ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களையும் தமிழில் மொழிபெயர்த்து அளித்தவர். ’ஜம்புநாதன் புஸ்தகசாலை’ என்ற தனது பதிப்பகத்தின் மூலம் பல நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர்.

பிறப்பு, கல்வி

மணக்கால் ராமசாமி ஜம்புநாதன் எனப்படும் ம.ரா.ஜம்புநாதன், திருச்சியை அடுத்துள்ள மணக்காலில், ஆகஸ்ட் 23, 1896-ல், ராமசாமி ஐயர்-லக்ஷ்மி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தை, வேத விற்பன்னராகவும், அவதானியாகவும் இருந்தார். பரம்பரை வழி ஜம்புநாதனுக்கும் அபார நினைவாற்றல் இருந்தது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என நான்குமொழிகளிலும் புலமை பெற்றார். வேதங்களை முறையாக் கற்றுத் தேர்ந்தார். உயர் கல்வியை முடித்த பின், சென்னையில் சிவில் என்ஜினியரிங் படித்தார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷனில் சிவில் என்ஜினியராகப் பணியாற்றும் வாய்ப்பு ஜம்புநாதனுக்குக் கிடைத்தது. இது அடித்தட்டு மக்களுடன் அவர் நெருங்கிப் பழகவும், அவர்களது பிரச்சனைகளை அறிந்து கொள்ளவும் காரணமானது.

சமூக வாழ்க்கை

ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டிருந்தார் ஜம்புநாதன். குறிப்பாக, மும்பையின் சாலையோரச் சிறுவர்கள் படும் கஷ்டங்களையும், அங்கு வசிக்கும் தமிழர்கள் படும் அவலங்களையும் கண்டு ம்னம் வருந்தினார். அம்மக்களின் அவலங்களை நீக்க உறுதி பூண்டார். அங்கு வாழும் தமிழ் மக்களின் பிள்ளைகள் முறையாகக் கல்வி பயில்வதற்காக மும்பை, தாராவியில் 1924-ல் தொடக்கப்பள்ளி ஒன்றை ஏற்படுத்தினார். அந்தப் பள்ளிதான், தமிழர்கள் கல்வி புரிவதற்கென்று மும்பையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் தமிழ்ப் பள்ளி. அதமை அடிப்படையாகக் கொண்டே மாநகராட்சியின் உதவியுடன் பிற்காலத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் ஐம்பத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகள் தோன்றின.

பணிகளும் பொறுப்புகளும்

சிதம்பரத்தில் நடந்த அகில இந்திய மாநாட்டிற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்து சிறப்புரையாற்றியிருக்கிறார்.  ஜப்பானில் நடந்த PEN மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ”உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்”, ”உலக சம்ஸ்கிருத அகாதமி ”என பல அமைப்புகளில் உறுப்பினராகப் பதவி வகித்ததுடன் பல நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்றும் நடத்தியிருக்கிறார்.

சிதம்பரத்தில் நடந்த அகில இந்திய மாநாட்டிற்கு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு, ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவழைத்துச் சிறப்புரையாற்றியிருக்கிறார்.  ஜப்பானில் நடந்த PEN மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ”உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்”, ”உலக சம்ஸ்கிருத அகாதமி ” போன்ற பல அமைப்புகளில் உறுப்பினராகப் பதவி வகித்ததுடன் பல நிகழ்ச்சிகளைப் பொறுப்பேற்றும் நடத்தியிருக்கிறார்.

நாணயச் சேகரிப்பு

பள்ளியில் படிக்கும் போதே நாணயங்கள் சேகரிப்பில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார் ஜம்புநாதன். ஊர் ஊராகச் சென்று ஆலயங்களை, கல்வெட்டுக்களைப் பார்வையிடுவதும், வரலாறுகளை அறிவதும், அது தொடர்பான நாணயங்கள் கிடைத்தால் அவற்றைச் சேகரிப்பதும் அவர் வழக்கமாக இருந்தது. சோழ, பல்லவ, விஜயநகரப் பேரரசுகள், பிரெஞ், பிரிட்டிஷ் நாணயங்கள் என பலதரப்பட்டதாக அவரது நாணயச் சேகரிப்புகள் விளங்கின. இவை தவிர ஔரங்கசீப்பின் நாணயங்கள், மைசூர் உடையார்கள், சுல்தான்கள், புதுக்கோட்டை சமஸ்தான நாணயங்கள், ஹைதராபாத் நிஜாம் நாணயங்கள் என 138 அரிய நாணயங்களை அவர் சேகரித்து வைத்திருந்தார். அவை பின்னர் ரிசர்வ் வங்கியின் அருங்காட்சியகமான மும்பையில் இருக்கும் RBI Monetary Museumத்திற்கு வழங்கப்பட்டன.


இலக்கிய வாழ்க்கை










🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.