எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை

From Tamil Wiki

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை நாடக முன்னோடிகளில் ஒருவர். நடிகர், கதாசிரியர், நாடக அமைப்பாளர். திருச்சியில் நாடக வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.

வாழ்க்கைக்குறிப்பு

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை திருச்சியில் பிறந்தார்.

கலை வாழ்க்கை

முறையான மேடை நாடகப்பயிற்சி பயின்றவர். சிட்டி அமெச்சூர்ஸ் என்ற நாடகக் கலைக்குழுவை திருச்சியில் உருவாக்க முன்னின்றவர். தமிழிசையில் ஆர்வம் கொண்டிருந்தார். நடிகர், கதாசிரியர், நாடக அமைப்பாளராக முப்பதாண்டுகளுக்கு மேல் செயல்பட்டார்.

மாணவர்கள்
  • சிவாஜி கணேசன்
  • எம்.ஆர். ராதா
  • டணால் தங்கவேலு
  • வி.கே. ராமசாமி

உசாத்துணை