being created

ப.வ. இராமசாமி ராஜு

From Tamil Wiki
Revision as of 12:15, 19 August 2022 by ASN (talk | contribs) (Para Added)

ப.வ. இராமசாமி ராஜு (பண்ருட்டி வல்லம் இராமசாமி ராஜு-1852-1897) தமிழின் முன்னோடி நாடக ஆசிரியர். 1877-ல், பிரதாப சந்திர விலாசம் என்ற நாடக நூலை எழுதி வெளியிட்டவர். பிரிட்டிஷ் அரசில் உயர் பதவி வகித்தவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றினார். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் எனப் பல மொழிகள் அறிந்தவர். சம்ஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் நாடகம் எழுதிய முன்னோடிகளுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

பண்ருட்டி வல்லம் இராமசாமி ராஜு என்னும் ப.வ. இராமசாமி ராஜு, 1852-ல், திண்டிவனத்தில், செல்வ வளமும் செல்வாக்கும் உள்ள குடும்பத்தில் பிறந்தார். தந்தை அரங்கசாமி ராஜு, பிரிட்டிஷ் அரசில் உப்பளத் துறை அதிகாரியாகப் (Salt Assistant Superintendent) பணியாற்றி வந்தார். தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட குடும்பம். தந்தை தமிழ், தெலுங்கு, ஆங்கிலத்தில் வல்லவராக இருந்தார். ஆனால், இராமசாமி ராஜு ஆங்கிலம் அறியாதவராகவே, அதில் ஆர்வமற்றவராகவே வளர்ந்தார். அதனால் தந்தை கண்டித்தார். மனம் வருந்திய இராமசாமி ராஜுவை உறவினர் இராமச்சந்திர நாயுடு சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்தார்.

தொடக்கக் கல்வியை நிறைவு செய்த ராஜு, உயர் கல்வியை சென்னை பச்சையப்பன் கலாசாலையில் பயின்றார். தன் பகுதியில் வசித்த ஐரோப்பிய சிறுவர்களுடன் நெருங்கிப்பழகி ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டார். சரளமாக ஆங்கிலத்தில், எழுதுவதிலும், பேசுவதிலும் வல்லவரானார். சென்னை மாநிலக் கல்லூரியில், 1871-ல், பி.ஏ. பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சென்னை பச்சையபன்ன கலாசாலையில் சில வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின் காஞ்சிபுரம் பச்சையப்பன் கலாசாலைக்கு தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்ததுடன் மாணவர்கள் ஊக்கமுடன் கல்வி பயில பல்வேறு நடைமுறைகளைக் கொண்டு வந்தார்





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.