being created

ஸ்திரீ தர்மம்

From Tamil Wiki
Revision as of 18:59, 5 September 2022 by ASN (talk | contribs) (Para Added)
ஸ்திரீ தர்மம்

இந்திய மாதர் சங்கத்தின் வெளியீடாகத் தோன்றிய இதழ் ஸ்திரீதர்மம். இவ்விதழ் நவம்பர், 1917-ல் ஆரம்பிக்கப்பட்டது. சுமார் 19 ஆண்டுகள் இவ்விதழ் வெளிவந்தது. ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என நான்கு மொழிகளும் இணைந்த ஒரே இதழாக இவ்விதழ் வெளிவந்தது.

பதிப்பு, வெளியீடு

ஸ்திரீதர்மம் இதழ், இந்திய மாதர் சங்கத்தின் சார்பாக வெளியான பிரசார இதழ். இது நவம்பர் 1917-ல் தொடங்கப்பட்டது. டாக்டர் அன்னிபெசன்ட் இச்சங்கத்தின் தலைவராக இருந்து வழி நடத்தினார். இதழின் இலச்சினையாக தளைகள் ஏதுமற்ற சுதந்திரமான பெண் ஒருவரின் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தது. அவள் வலது கையில் தாமரை மலரையும் , இடது கையில் ஓர் ஒளி விளக்கையும் கொண்டிருப்பதாக அச்சின்னம் இருந்தது. “மதம் , அறிவு , அமைப்பு , சேவை , அழகு , செல்வம் , உள்ளுணர்வு , ஒற்றுமை ஆகியவற்றை ஒருசேரக் கொண்டு விளங்கும் பெண் இந்த இலட்சியப் பெண்” என்கிறது இதழில் இடம் பெற்றிருக்கும் குறிப்பு.

ஸ்திரீ தர்மம் முதலில் காலாண்டு இதழாக வெளிவந்தது. சில ஆண்டுகளுக்குப் பின் மாத இதழாக வெளியானது. ஆண்டினைக் குறிக்க தொகுதி என்பதையும், மாதத்தைக் குறிக்க பகுதி என்பதையும் இவ்விதழ் பயன்படுத்தியுள்ளது. இதழின் ஆசிரியர்களாக திருமதி எம்.இ. கஸின்ஸ் , டாக்டர் முத்துலட்சுமிரெட்டி , திருமதி தாதாபாய் ஆகியோர் இருந்தனர்.







🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.