under review

சிண்டு நடனம்

From Tamil Wiki
Revision as of 23:26, 8 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs)

வேட்டை தொடர்பாக வேட்டை சாதியினரால் நிகழ்த்தப்படும் நடனம் சிண்டு நடனமாகும். பாண்டிசேரி சுற்றுவட்டார பகுதியில் வாழும் கரையர், கல்லயர், குருவிக்காரர் ஆகிய பழங்குடி மக்களிடையே இந்த ஆட்டம் வழக்கில் உள்ளது.

நடைபெறும் முறை

சிண்டு நடனம் நாட்டார் தெய்வக் கோவில் விழாக்களிலும், சமூக விழாக்களிலும் நிகழ்த்தப்படுகிறது. இதனை நிகழ்த்தும் சாதியினர் பறவைகளை கண்ணி வைத்து பிடிக்கும் வேட்டை சாதியினர். இவர்களின் இச்செயலை விளக்குவதாக இந்த நடனம் நிகழும்.

சிண்டு தொடங்குவதற்கு அறிகுறியாக குழுத்தலைவர் பாடுவார். அவர் ஒரு வரியை பாடியதும் குழுவில் உள்ள மற்றவர்கள் அந்த வரியை சேர்ந்து பாடி ஆடுவர். இவர்கள் ஆடும் ஆட்டத்தில் துரிதம் இருக்கும். எனவே இந்தக் கலை தொழில் பயிற்சிக்கு உரியதாகவும் கருதப்படுகிறது.

தொழில் பயிற்றுமுறை

இந்த நடனத்திற்கு தலைவராக நிகழ்த்தும் சாதியினரின் தலைவர் இருக்கிறார். இவர் நடனம் தொடங்குவதற்காக ஒரு வரியை பாடும் போது மற்றவர்கள் அதனை சேர்ந்து பாடு ஆடுகின்றனர். அவர்கள் ஆடு வரும்தோறும் அதில் துரித நிலை கூடிக் கொண்டே செல்லும். அதனை கூட்டி கூட்டி சென்று உச்சநிலை அடைவதே இந்த சிண்டு நடனம். பறவைகளை வேட்டை ஆடுவதை விளக்குவதாக அமையும் இந்த நடனம் அதற்கான தொழிற்முறை பயிற்சி களமாகவும் பார்க்கப்படுகிறது.

நடைபெறும் இடம்

இக்கலையை நாட்டார் தெய்வ கோவில் விழாவின் போது அதன் வளாகத்திலும், பிற சமூக விழாக்களின் போது பொது இடங்களிலும் நிகழ்த்துகின்றனர்.

நிகழ்த்தும் சாதியினர்

பாண்டிசேரி பக்கம் உள்ள கரையர், கல்லயர், குருவிக்காரர் போன்ற பழங்குடி சாதியினர் இந்நிகழ்த்துக் கலையை நிகழ்த்துகின்றனர்.

நிகழும் ஊர்கள்

  • பாண்டிசேரி சுற்று வட்டாரம்

உசாத்துணை

  • தமிழக நாட்டார் நிகழ்த்துக் கலைகள் களஞ்சியம் - அ.கா.பெருமாள்

வெளி இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.