under review

வனம்

From Tamil Wiki
வனம்

தமிழ் இலக்கியம் சார்ந்த நவீன மின்னிதழ். ஜனவரி 2021 முதல் தொடர்ந்து மாத இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

வரலாறு

மாத இதழ். ஜனவரி 2021 முதல் மின்னிதழாகத் தொடர்ந்து வெளிவருகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அக்கரைப்பற்று என்ற ஊரிலிருந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதழின் நோக்கத்தை ஆசிரியர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்
  • காத்திரமான விடயங்களின் பக்கம் நகர்ந்து செல்வதும், அதன் தோற்றுவாயிலிருந்து உரையாடல்களை உருவாக்குவதும், கசிந்து செல்லும் நீரூற்றினை உடைத்து பெரும் ஆற்றினை உருவாக்கும் படைப்புக்களை வனம் தாங்க நினைக்கிறது.
  • வனம் என்பது உரையாடல்களின் வெளியாக மாத்திரமன்றி; உடைப்புக்களின் தொனியாகவும் இயங்கும்.

பொறுப்பாசிரியர்கள்

  • ஷாதிர் யாசீன்
  • சாஜித் அஹமட்
  • சப்னாஸ் ஹாசிம்

பதிவு வகைகள்

  • கவிதை
  • சிறுகதைகள்
  • கட்டுரை
  • நூல் விமர்சனம்
  • நேர்காணல்
  • ஆளுமைகள்

இணைப்புகள்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.