பாமா

From Tamil Wiki

பாமா (பிறப்பு: 1958) எழுத்தாளர்.

பிறப்பு, கல்வி

பாமா 1958-இல் மதுரை, புதுப்பட்டியில் பிறந்தார். பி.எஸ்.ஸி; பி.எட் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

சில வருடங்கள் ஆசிரியராகப் பணியாற்றினார். கன்னியாஸ்த்ரீ ஆனார். அங்கிருந்து பின் விலகி மொழிபெயர்ப்பு பணியில் ஈடுபட்டார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் வருகை தரு இலக்கிய ஆளுமையாக இருந்தார். தற்போது உத்திரமேரூர் அருகிலுள்ள ஓங்கூரில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

கருக்கு(1992), சங்கதி (1994) இவரது கருக்கு நாவலை லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் ஆங்கிலத்தில் மேக்மிலன் வெளியீடாக மொழிபெயர்த்துள்ளார். இம்மொழிபெயர்ப்புக்காக லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் 2000இல் சிறந்த மொழிபெயர்ப்புக்கான க்ராஸ்வேர்ட் விருதைப் பெற்றார். இவரது சங்கதி நாவல் ஆங்கிலத்திலும், பிரஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தியா டுடே இதழில் வெளியான ‘அண்ணாச்சி’ சிறுகதை பதினாறு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

இலக்கிய இடம்

”பாமாவின் கருக்கு நாவல் தலித் இலக்கியத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று” என வெங்கட் சாமி நாதன் மதிப்பிடுகிறார்.

விருது

  • குரல் விருது
  • தலித் முரசு விருது

நூல்கள் பட்டியல்

நாவல்
  • கருக்கு (1992)
  • சங்கதி (1994)
  • வன்மம் (2002)
  • மனுசி
சிறுகதைகள் தொகுப்பு
  • கிசும்புக்காரன் ( (1996)
  • கொண்டாட்டம்

உசாத்துணை