வேரில் பழுத்த பலா (நாவல்)

From Tamil Wiki

வேரில் பழுத்த பலா (1983) சு. சமுத்திரம் எழுதிய நாவல்.

வெளியீடு

சு. சுமுத்திரம் ‘வேரில் பழுத்த பலா’ என்ற இந்த நாவலை 1983ஆம் ஆண்டு எழுதினார்.

ஆசிரியர் அறிமுகம்

‘வேரில் பழுத்த பலா’ என்ற இந்த நாவலின் ஆசிரியர் சு. சமுத்திரம். இவர் 1941-ஆம் ஆண்டு பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தன்னுடைய பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தவர். பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி, இறுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ் சேவைப்பிரிவிலும் செய்தி வாசிப்புப் பிரிவிலும் பணிபுரிந்தார். 15 புதினங்கள், 8 குறும் புதினங்கள், 500 சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், நாடகம் ஆகியவற்றைப் படைத்துள்ளார்.