being created

மோசிகீரனார்

From Tamil Wiki
Revision as of 18:04, 12 August 2022 by Tamizhkalai (talk | contribs)

மோசி கீரனார் சங்ககாலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள மோசி என்னும் ஊரையோ அல்லது தொண்டை நாட்டில் உள்ள மோசூரையோ சேர்ந்தவராகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவரது பெயரைக் (மோசி + கீரன்) கொண்டு இவர் கீரன் குடியைச் சேர்ந்தவராயிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. சேர மன்னனான தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையையும், கொண்கானங் கிழானையும் இவர் பாடியுள்ளார். இவர் பாடிய பாடல்கள் அகநாநூற்றிலும், நற்றிணையிலும் ஒவ்வொன்றும், குறுந்தொகையில் இரண்டும் , புறநானூற்றில் நான்கும் உள்ளன. முரசுக் கட்டிலில் அறியாமல் துயின்றபோதும் சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை அவரைத் தண்டிக்காமால் கவரி வீசிய வரலாறு புகழ்பெற்றது.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.