வாதம்

From Tamil Wiki

வாதம்: தர்க்கமுறை. ஒரு குறிப்பிட்ட தர்க்கம். தமிழில் சொல்லொட்டாக அமைகையில் ஆங்கிலத்தில் ism என்ற ஒலியிணைவின் தமிழ்வடிவம்.

பயன்பாடு

வாதம் என்னும் சொல்லொட்டு குறிப்பிட்ட பார்வைக்கோணத்தையோ, கொள்கையையோ, சிந்தனைமுறையையோ, ஒரு வாதத்தையோ குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. இது இயம் என்னும் சொல்லொட்டு புழக்கத்திற்கு வருவதற்கு முன்பு மொழியாக்கம் செய்யப்பட்ட கலைச்சொற்களில் பயன்படுத்தப்பட்டது. அதே பொருள் கொண்டது

உதாரணம் பொருள்முதல்வாதம் ( Materialism) அமைப்புமுதல் வாதம் ( Structuralism) தாராளவாதம் (Liberalism) . மார்க்ஸியம் தொடக்க காலத்தில் அபேதவாதம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது.

(பார்க்க இயம்)