எனது பர்மா வழி நடைப் பயணம்

From Tamil Wiki

பர்மாவில் வசித்து வந்த வெ.சாமிநாத சர்மா, இரண்டாம் உலகப் போரின் போது தனது மனைவியுடன் அங்கிருந்து புறப்பட்டு சுமார் இரண்டு மாத காலம் பயணம் செய்து இந்தியா வந்தடைந்தார். அந்த அனுபவக் குறிப்புகளைப் பின்னர் எழுத்தாளர் பெ.சு.மணியிடம் கையளித்திருந்தார். மணியின் முயற்சியால் அந்தக் குறிப்புகள் 1978 முதல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளியாகின. பின்னர் அது நூலாக்கம் செய்யப்பட்டது. அது திருமகள் நிலையத்தாரால் ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியானது.

எழுத்து, வெளியீடு

‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூலை திருமகள் நிலையம் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 1979-ல் வெளியான இந்த நூலின் விலை ரூ. 11.00. மொத்தப்பக்கங்கள் : 232. இந்த நூலுக்கு அணிந்துரையை ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதியுள்ளார். சர்மாவின் வாழ்க்கைக் குறிப்புகள் பற்றி கு.அழகிரிசாமி பதிவு செய்துள்ளார். இந்த நூல் அமுதசுரபியில் தொடராக வெளியானது. ஆனால், முதல் அத்தியாயம் அடங்கிய இதழைக் காண வெ.சாமிநாத சர்மா உயிரோடு இல்லை.

அவரது மரணத்திற்குப் பின் அவரது இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் ‘எனது பர்மா வழிநடைப் பயணம்’ நூலைக் கொண்டு வந்தார் நண்பர் பெ.சு.மணி.

உள்ளடக்கம்

“பயண நூல்கள் பலவற்றைப் படித்துள்ளேன். நானும் இரண்டு நூல்களை எழுதியிருக்கிறேன். அந்த வகையில் சேர்ந்தது அல்ல இது. மரண யாத்திரையைக் கூறும் நூல் இது. இதற்கு இணை சொல்ல இன்னொரு நூல் எனது நினைவிற்கு வரவில்லை” என்கிறார், நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் ம.பொ.சிவஞானம்.

நூலிருந்து சில பகுதிகள்

இலக்கிய இடம்

உசாத்துணை