இமையம்
இமையம் (வெ. அண்ணாமலை) (பிறப்பு:மார்ச் 10, 1964) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர். 2020இல் “செல்லாத பணம்” நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
மார்ச் 10, 1964இல் கடலூர், திட்டக்குடி, கழுதூரில் பிறந்தார்.இயற்பெயர் வெ.அண்ணாமலை. இமையம் முதுகலைப் பட்டம் பெற்றுப்
தனி வாழ்க்கை
பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ச.புஷ்பவள்ளி முதுநிலை ஆசிரியராக பணியாற்றுகிறார். குழந்தைகள் கதிரவன் மற்றும் தமிழ்ச்செல்வன்.
இலக்கிய வாழ்க்கை
இமையம் என்ற புனைபெயரில் எழுதும் தனது முதல் புதினமான கோவேறு கழுதைகள் மூலம் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமானார். "கோவேறு கழுதைகள்", இலட்சுமி ஓம்சுற்றோம் (Lakshmi Holmstrom) என்பவரால், “Beasts of Burden“ என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவர் எழுதிய செல்லாத பணம் என்ற புதினத்திற்கு 2020-ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
கோவேறு கழுதைகள் என்ற புதினம், 2001 இல் பீஸ்ட் ஆஃப் பர்டன் (BEAST OF BURDEN) என்ற பெயரில் East West Books என்ற பதிப்பகத்தாரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இதே புதினம் 2009 இல் பாஷா பாரதி என்னும் நிறுவனத்தால் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடப்பெற்றுள்ளது. ஆறுமுகம் என்ற புதினம் கதா நிறுவனத்தால் அதே பெயரில் ஆங்கிலத்தில் 2006 இல் வெளியிடப்பெற்றுள்ளது. பெத்தவன் என்ற நெடுங்கதை Oxford University Press என்ற பதிப்பகத்தின் மூலம் 'The Begetter' என்ற பெயரில் 2015 இல் வெளியிடப்பட்டுள்ளது
இலக்கிய இடம்
எழுத்தாளர் சுந்தர ராமசாமி ”கோவேறு கழுதைகள்” நாவலைப் பற்றிக் கூறுகையில், ”தமிழ் எழுத்துலகில் கடந்த நூறு ஆண்டுகால வளர்ச்சியில், இந்த நாவலுக்கு இணையானது வேறொன்றும் இல்லை” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
எழுத்தாளர் ராஜ்கௌதமன் ”தலித் சமூகத்தின் அவலநிலைகளை மட்டுமே முன்னிறுத்துவதாகவும் மேல் சாதியினர் புகழக்கூடிய வகையானதாகவும் இப்புதினம் உள்ளது” என குற்றம் சாட்டுகின்றார்.
விருதுகள்
- சாகித்திய அகாதமி விருது - 2020 - செல்லாத பணம் புதினம்
- அக்னி அட்சரம் விருது - 1994
- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க விருது - 1994
- அமுதன் அடிகள் இலக்கிய விருது - 1998
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது - 1999
- இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சகம் இளநிலை ஆய்வு நல்கையை-2002
- தமிழக அரசின் தமிழ்த் தென்றல் திரு வி.க. விருது -2010
- பெரியார் விருது - 2013 - திராவிடர் கழகம்.
- இயல் விருது - 2018 - தமிழ் இலக்கியத் தோட்டம், கனடா
- சாகித்திய அகாதமி விருது, 2020
நூல்கள் பட்டியல்
நாவல்
கோவேறு கழுதைகள் 1994 ஆறுமுகம் 1999 செடல் 2006 எங் கதெ 2015 செல்லாத பணம் 2018
சிறுகதைத் தொகுப்புகள்
மண்பாரம் - 2002 வீடியோ மாரியம்மன் - 2008 கொலைச் சேவல் - 2013 சாவு சோறு - 2014 நறுமணம் - 2016 நன்மாறன் கோட்டைக் கதை - 2019
நெடுங்கதை
பெத்தவன்(க்ரியா பதிப்பகம்) - 2013
மொழிபெயர்க்கப்பட்ட நூல்கள்
- BEAST OF BURDEN (கோவேறு கழுதைகள்)
- The Begetter (பெத்தவன்)