மறைஞான சம்பந்தர்

From Tamil Wiki

மறைஞான சம்பந்தர் (கண்கட்டி)(16ஆம் நூற்றாண்டு) தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்றழைக்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

களந்தையில் 16ஆம் நூற்றாண்டில் பிறந்தார். சிதம்பரத்தில் குகை மடத்தில் வாழ்ந்தபோது இவர் தன் புலன்களை அடக்குவதற்கு உதவியாகத் தன் கண்களைக் கட்டிக்கொண்டு வாழ்ந்ததால் ‘கண்கட்டி பண்டாரம்’ என்றழைக்கப்பட்டார்.

வேறு பெயர்கள்
  • தேசிகர்
  • காளத்தி மறைஞான பம்பந்தர்
  • சிதம்பரம் மறைஞான பம்பந்தர்
  • குகைமடம் மறைஞான பம்பந்தர்

இலக்கிய வாழ்க்கை

மறைஞான சம்பந்தர் பல நூல்களை இயற்றிய புலவர். 1546இல் இயற்றிய கமலாலய புராணம் முக்கியமான நூல்

நூல்கள் பட்டியல்

சாத்திரப் பெருநூல்கள்
  • சிவதருமோத்தரம்
  • சமய நெறி
  • பதிபசுபாசப் பனுவல்
  • சங்கற்ப நிராகரணம்
  • உருத்திராக்க விசிட்டம்
  • முத்திநிலை
  • பரமோபதேசம்
  • வருத்தமற உய்யும் வழி
  • ஐக்கியவியல்
சிறு நூல்கள்
  • மகா சிவராத்திரி கற்பம்
  • மாத சிவராத்திரி கற்பம்
  • சோமவாரச் சிவராத்திரி கற்பம்
  • சோமவாரக் கற்பம்
  • திருக்கோயிற் குற்றம்
புராணம்
  • அருணகிரிப் புராணம்
கிடைக்காத நூல்கள்
  • பரமத திமிரபானு
  • இறைவனூறுபயன்
வடமொழி நூல்
  • ஆன்மாத்த பூஜா பத்ததி

உசாத்துணை