first review completed

ஆனாசி அருளப்பு

From Tamil Wiki
Revision as of 17:58, 26 June 2022 by Logamadevi (talk | contribs)
ஆனாசி அருளப்பு (நன்றி: செல்லையா மெற்றாஸ்மயில்)

ஆனாசி அருளப்பு (ஏப்ரல் 8, 1954) ஈழத்து நாட்டுக்கூத்துக்கலைஞர். தென்மோடிக் கூத்துக்கள் பலவற்றை மேடையேற்றிய அண்ணாவியார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை நாராந்தனை வடமேற்கு ஊர்க்காவல் துறையில் ஏப்ரல் 8, 1954-ல் ஆனாசி அருளப்பு பிறந்தார். புனித அந்தோனியார் கல்லூரியில் எட்டாம்வகுப்பு வரை பயின்றார்.

கலை வாழ்க்கை

நாராந்தனையில் தென்மோடிக்கூத்து பிரபலமானதால் ஆனாசி அருளப்பு அதன் மீது ஆர்வம் கொண்டார். பூந்தான் யோசேப்பு அண்ணாவியார் ஆனாசி அருளப்பின் குரு. முதன்முதலில் சங்கிலியன் மகனாக சங்கிலியன் நாடகத்தில் நடித்தார். தென்மோடி நாட்டுக்கூத்துக்கள் நடித்தார். பாஷையூர், கொழும்புத்துறை, மாலிப்பாப் ஆனைக்கோட்டை, நாவாந்துறை, குருநகர் கிழக்கு வளன்புரம், பாலைபூர் சுதிற்றல் வீதி ஆகிய இடங்களில் நடித்தார். நாரந்தனை புனித சம்பேதுறுவார் ஆலய கலைஞர்கள், நாரந்தனை மேற்கு கலைஞர்கள், நாரந்தனை வடக்கு கலைஞர்கள், புனித அந்தோனியார் கல்லூரி மாணவர்கள், தம்பாட்டி கலைஞர்கள், வேளாங்கன்னி ஆலயம் பங்கு மக்கள், கரம்பன் புனித செபஸ்தியார் ஆலயம் ஆகியோர்களுக்கு கூத்து பழக்கினார். ஞா.ம. செல்வராசாவால் புதிதாக பாடப்பட்ட நாடகங்களுக்கு ராகம் அமைத்தார்.

இணைந்து நடித்தவர்கள்
  • சின்னத்தம்பி அந்தோனி
  • யோசம் இரேசம்மா
  • குருகமுத்து திருச்செல்வம்
  • சுவாம்பிள்ளை நம்பித்துரை
  • நீச்கிலாஸ் வி .3 சென்டிபோல்
  • ஆசிர்வாதம் மரியதாஸ்
  • பேக்மன் ஜெயராஜா
  • அந்தோனி பாலதாஸ்
  • வஸ்தியாம்பிள்ளை அல்பிரட்
  • சேவியர் செல்லத்துரை

விருதுகள்

  • கலாநிதி பூந்தன் யோசேப்பு ”கலைக்காவலன்” பட்டம் வழ்ங்கினார்.
  • 1977-ல் புனித அந்தோணியார் கல்லூரி பொன்னாடை போர்த்தி ”அமிர்தகான அண்ணாவி” பட்டத்தை வழங்கியது.
  • 1978-ல் ஊர்க்காவற்றுறை மக்கள் அன்னை வேளாங்கன்னி நாடகத்தில் ”நாடகரத்தினம்” பட்டம் வழங்கியது.
  • 1985-ல் தியாகுப்பிள்ளை ”நாடகக் காவலர்” பட்டம் வழங்கினார்.

நடித்த நாடகங்கள்

  • சங்கிலியன்
  • சம்பேதுறு சம்பாவிலு
  • கருங்குயில் குன்றத்துக் கொலை
  • எஸ்தாக்கியார்
  • செல்லையா
  • ஞானசவுத்திரி
  • திருஞானதீபம்
  • தருமப்பிரகாசன்
  • செனகப்பு
  • செபஸ்தியார்
  • இம்மானுவில்

அரங்கேற்றிய கூத்துகள்

  • சம்பேதுருவார்
  • தர்மப்பிரகாசன்
  • கருங்குயில் குன்றத்தின் கொலை
  • எஸ்தாக்கியார்
  • ஏழை படும்பாடு
  • ராஜராஜசோழன்
  • பண்டாரவன்னியன்
  • சங்கிலி அரசன்
  • ஞான சவுந்தரி
  • அன்னை வேளாங்கன்னி
  • செபஸ்ரியார்
  • சங்கிலியன்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.