வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்

From Tamil Wiki
Revision as of 16:35, 14 June 2022 by Ramya (talk | contribs)
வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப்

வஸ்தியாம்பிள்ளை ஜேக்கப் (அல்பிரட்) (டிசம்பர் 7, 1939) ஈழத்து நாட்டுக்கூத்துக் கலைஞர். இசை நாடகங்கள், நாட்டுக்கூத்து என ஆயிரம் மேடைகள் கண்ட கலைஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் பாஷையூரில் டிசம்பர் 7, 1939இல் ஞானப்பு-வஸ்தியாம்பிள்ளை பிறந்தார். தந்தை புகழ்பெற்ற அண்ணாவியார். அண்ணாவியார் பரம்பரையைச் சேர்ந்தவர்.

கலை வாழ்க்கை

பதின்மூன்று வயதில் புனிதவதி நாட்டுக்கூத்தில் நடித்தார். 1953 முதல் நாற்பத்தியாறு ஆண்டுகள் கலைத்துறையில் பங்காற்றினார். நாட்டுக்கூத்து, நாடகம், இசை நாடகம் அரங்கேற்றினார். மிருதங்கம் வாசித்தலில் திறமை கொண்டிருந்தார். புதியவர்களைக் கொண்டு நாட்டுக்கூத்தையும் நாடகத்தையும் அரங்கேற்றினார். நாட்டுக்கூத்தில் ஆறரை கட்டை சுருதியில் வீரம், காதல், பாட்டுக்களை பாடக்கூடிய குரல்வளம் கொண்டவர். கண்டியரசன் கூத்தில் இவரில் அரசன் வேடம் பாராட்டப்பட்டது. ஆயிரம் மேடைகளைக் கண்ட கலைஞர்.

வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் கட்டபொம்மனாக

நடித்த நாடகங்கள், பாத்திரங்கள்

  • புனிதவதி - அரசன், துற்குணன்
  • வித்தியானந்தன் - வித்தியானந்தன்
  • ஞானசவுந்தரி - பிலேந்திரன்
  • கண்டி அரசன் - கண்டியரசன்
  • சந்தியோமையர் - யாகப்பர்
  • வீரத்தளபதி - வீரத்தளபதி
  • சற்குணானந்தன் - சுதன்
  • அந்தோனியார் - லெவ்வை
  • கலாவதி - சீசன்
  • சகோதரபாசம் - கள்ளன்
  • கிளியோபெற்றா - யூலியசீசர்
  • யோசவ்வாஸ் - யோசவ்வாஸ்
  • கனகசபை - கொர்னல்
  • சங்கிலியன் - சங்கிலியன்
  • இம்மனுவல் - இம்மனுவல்
  • பண்டாரவன்னியன் - பண்டாரவன்னியன்
  • யூலியசீசர் - யூலியசீசர்
  • சவேரியார் - சவேரியார்
  • பவுலினப்பர் - பவுலினப்பர்
  • செனகப்பு - அரசன்
  • தேவசகாயம்பிள்ளை - அரசன் அதிகாரி
  • கற்பலக்காரன் - அரசன்
  • விசயமனோகரன் - விசயமனோகரன்
  • தியாகராகம் - தளபதி
  • மயானகாண்டம் - அரசன்
  • சஞ்சுவான் - அருளப்பர்
  • படைவெட்டு - சந்தியோமையர்
  • செந்தூது - யாகப்பர்
  • மனோகரா - மனோகரன்
  • மரியகொறற்றி - அரசன்
  • மனம்போல் மாங்கல்யம் - வேடன்
  • யோகு - நண்பன்
  • செபஸ்தியார் - அதிகாரி
  • எஸ்தாக்கியர் - கப்பல்காரன்
  • பூதத்தம்பி - பூதத்தம்பி
இசை நாடகங்கள்
  • பத்துக்கட்டளை - மோசஸ்
  • சங்கிலியன் - தளபதி
  • வளையாபதி - புலவர்
  • ஞான சவுந்தரி - சிமியோன்
  • தங்கையின் காதலன் - தகப்பன்
  • விதி - அரசன்
  • யேசுவின் திருப்பாடுகள் - செந்தூரியன்

உசாத்துணை