ஆந்தை கூட்டம்
ஆந்தைக் கூட்டம் :கொங்கு வேளாரின் குலக்குழுக்களில் ஒன்று. ஆந்தை என்பது குலக்குறி அடையாளம்.
பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்
வரலாறு
ஆந்தைக் கூட்டத்தினர் திருச்செங்கோட்டினை முதன்மையிடமாகக் கொண்டவர்கள். மோசூர்நாட்டை, சூரிய காங்கேயன் வென்றதால் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர் என்று தொன்மகதை சொல்கிறது. காங்கேயம் அகிலாண்டபுரம் அகத்தீச்சுவரர் ஆலயத்தின் முதல் மண்டபத்தை ஆந்தையர் கட்டினர். ஆந்தை குலத்து குழந்தைவேலன் குலோத்துங்கனுக்கு தொடையல் மாலை அணிவித்தான் என பாடல்குறிப்பு உள்ளது
ஊர்கள்
கொன்றையாறு முத்தூர் பருத்திப்பள்ளி , மாணிக்கம் பாளையம் , பட்டணம் , பாலமேடு , தென்னிலை , தோளூர், பிடரியூர்,திண்டமங்கலம் , திருவாச்சி , கோதூர், வெள்ளக்கோவில் , கூத்தம்பூண்டி, குற்றாணி, ஒருவங்குறிச்சி, முறங்கம், கரியாண் குலம், பொன்பரப்பு, கொற்றனூர் ஆகிய ஊர்களில் ஆந்தை குலத்தினர் காணி கொண்டனர்.