கமலா பத்மநாபன்
கமலா பத்மநாபன் (1913 - நவம்பர் 12, 1945) தமிழின் தொடக்ககாலப் பெண் எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதியவர். நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
வாழ்க்கைக் குறிப்பு
கமலா பத்மநாபன் 1913-ல் தஞ்சையில் பிறந்தார். இவரின் தாத்தா டி.வி. கோபாலசாமி ஐயர் தியாசாபிகல் சொஸைட்டியைச் சேர்ந்தவர். கணவர் பத்மநாபன் மைசூரில் பொதுப்பணித்துறையில் பொறியாளர்.
இலக்கிய வாழ்க்கை
தமிழ், ஆங்கிலம் என இருமொழிப்புலமை பெற்றவர். சுதேசமித்திரன், கலைமகள், கல்கி, ஜகன்மோகினி, காவேரி, பாரதமணி போன்ற இதழ்களில் கமலா சிறுகதைகள் எழுதினார். சமூக அவலங்களைச் சாடும் சிறுகதைகள், நகைச்சுவை கொண்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். 1941-ல் கலைமகள் இதழில் சியாமளா சிறுகதை வெளியானது. ’ஏமாந்தது யார்?’, ’பெண் பிடிக்கவில்லை’ போன்றவை இவர் எழுதிய நகைச்சுவை சிறுகதைகள். நாவல்கள், கட்டுரைகள் எழுதியுள்ளார்.
மறைவு
கமலா பத்மநாபன் நவம்பர் 12, 1945-ல் காலமானார்.
நூல்கள்
சிறுகதைகள்
- ஏமாந்தது யார்?
- பெண் பிடிக்கவில்லை
- ராமுவின் மனைவி
- கலாவின் கருணைக் கண்கள்
- படித்த முட்டாள்
- மனம் போல் மாங்கல்ய வாழ்வு
- ஸ்திரி சுபாவம்
- வரப்பிரசாதி
- நல்ல துணை
- சியாமளா
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் - 2 (பெண்ணெழுத்து - 1 : 1907-1947)”; தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
✅Finalised Page