under review

மதுரநாத தர்க்கவாகீசர்

From Tamil Wiki
Revision as of 01:04, 13 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

மதுரநாத தர்க்கவாகீசர் (பொயு 1550) இந்திய தத்துவ அறிஞர். நியாயவியலின் இரண்டாம் கட்டமான நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர்

பிறப்பு, கல்வி

மதுரநாத தர்க்கவாகீசர் வங்காளத்தில் நவதீப் என்னும் இடத்தில் புகழ்பெற்ற தர்க்கவியலாளர் ஶ்ரீராம தர்க்காலங்காரர் என்பவரின் மகனாகப் பிறந்தார். ராம்பத்ர சார்வபௌமன், ஜகதீஷ் தர்க்காலங்காரர் ஆகியோரிடம் கல்வி கற்றார்.

பங்களிப்பு

மதுரநாதர் நவநியாய மரபின் ஆசிரியர்களில் ஒருவர். காங்கேச உபாத்தியாயர் எழுதிய தத்துவ சிந்தாமணிக்கு இவர் எழுதிய தர்க்க மாதுரி என்னும் உரை முக்கியமானது. புகழ்பெற்ற தர்க்கவியல் நிபுணரான ஹரிஹர தர்க்காலங்காரர் இவருடைய மாணவர்.

நூல்கள்

  • சித்தாந்த ரகஸ்யம்
  • குணபிரகாச விருத்தி
  • திரவ்யபிரகாச டீகா
  • திரவியகிரணாவளி டீகா
  • குணாதிதி மாதுரி
  • அனுமானதிதி மாதுரி
  • தத்வசிந்தாமணி ரஹஸ்யா
  • தத்வசிந்தாமணி அலோக
  • கிரணாவளி பிரகாச ரகஸ்யா
  • நியாயலீலாவது பிரகாச ரகஸ்யா
  • பௌத்த திக்கார ரகஸ்யா

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Nov-2024, 10:42:15 IST