under review

இந்திரா சௌந்தர்ராஜன்

From Tamil Wiki
Revision as of 21:44, 4 February 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Content updated by Jeyamohan, ready for review)



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.


இந்திரா சௌந்தர்ராஜன்

இந்திரா சௌந்தர்ராஜன் (நவம்பர் 13, 1958) தமிழ் வெகுஜன இலக்கிய எழுத்தாளர். நாவல்கள் , திரைப்படங்கள் , தொலைக்காட்சித்தொடர்கள், ஆன்மிக சொற்பொழிவு  போன்ற பல துறைகள்  மூலம் புகழ்பெற்றவர். தென்னிந்திய மரபுகள் மற்றும் புராணக்கதைகளில் நிபுணத்துவம் பெற்ற அடிப்படையில் வரலாறு, சமூகம், ஆன்மிகம் , மர்மங்கள், சித்தர்கள் பற்றிய நூல்களை எழுதிக்கொண்டிருப்பவர் .

பிறப்பு, இளமை

இந்திரா சௌந்தர்ராஜன் நவம்பர் 13, 1958-ல் சேலத்தில் பிறந்தார். இவரது தந்தை பார்த்தசாரதி, அன்னை இந்திரா அம்மாள். தன் இளமைக்காலங்கள் வரை சேலத்தில் வாழ்ந்து வந்தார். தற்போது மதுரையில் வசிக்கிறார். எழுத்தாளர் மகரிஷியின் ஆலோசனையின் பேரில் தன் தாயின் பெயரை இணைத்துக்கொண்டு இந்திரா சௌந்தர்ராஜன் என்ற பெயரில் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறார்.

இலக்கிய பங்களிப்பு

இந்திரா சௌந்தர்ராஜனின் முதல் நாவல் 1978ல் கலைமகள் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு வென்ற 'ஒன்றின் நிறம் இரண்டு' என்ற நாவல். அதில் கிடைத்த வரவேற்பு காரணமாக எழுத ஆரம்பித்தார். இந்திரா சௌந்தர்ராஜன் எழுத வந்த காலங்களில் மர்மக்கதைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால் அவரும் மர்மக்கதைகள் பல எழுதி அதில் நிறைவில்லாமல் வாழ்க்கைப்பற்றிய தேடல்கள் , கேள்விகள் மூலமாக மூலம் அமானுஷ்ய நாவல்களை எழுத ஆரம்பித்தாக ஒரு பேட்டியில் விளக்குகிறார் .

வார இதழ்கள்

ஆனந்த விகடன் வார இதழில் வெளிவந்த ' கோட்டைபுரத்து வீடு ' என்ற தொடரின் மூலம் வெகுஜன ரசிகர்களைக் கவர்ந்த இவர் பின்னர் 'ஐந்து வழி மூன்று வாசல் ', 'ரகசியமாய் ஒரு ரகசியம் 'போன்ற தொடர்களை எழுதினார். தனக்கென்று ஒரு பாணியை வகுத்துக்கொண்டு அமானுஷ்யம் , சித்தர்கள் பற்றிய குறிப்புகள் , ஆன்மிக மர்மங்கள் போன்றவற்றை களமாகக்கொண்டு கதைகளை எழுத ஆரம்பித்தார் .

தொலைக்காட்சி

விகடனில் 'ரகசியமாய் ஒருத்தி ரகசியம்' என்ற தொடரை 'மர்மதேசம்' என்ற பெயரில் தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதினார் . பின்னர் அந்த வரிசையில் 'விடாது கருப்பு', 'ருத்ரவீணை', 'கிருஷ்ணதாசி', 'சிவமயம்', 'அதுமட்டும் ரகசியம்' போன்ற பல தொடர்கள்  தொலைக்காட்சியில் வெளிவந்தன .

திரைத்துறை

இந்திரா சௌந்தர்ராஜனின்  முதல் திரைப்படம்  'சிருங்காரம்' . தேசிய விருது பெற்ற அப்படம் 70 ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூர் பின்புலத்தில் வாழ்ந்த தேவதாசிகளைப்பற்றிய கதை. அதைத்தொடர்ந்து அனந்தபுரத்து வீடு மற்றும் இருட்டு போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன .

படைப்புக்கள்

இந்திரா சௌந்தர்ராஜனின் படைப்புக்கள் இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் , மறுபிறப்பு , பேய்கள் , கடவுள்கள் போன்ற நிகழ்வுகளை அடிப்படையாக்ககொண்டு உருவாக்கப்பட்ட புனைவுகள் .அவை பெரும்பாலும் தமிழ்நாட்டை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்த உண்மைச்சம்பவங்களை மாதிரியாகக்கொண்டு உருவாக்கப்பட்ட படைப்புக்கள் .இவரது நாவல்கள் கிரைம் ஸ்டோரி மற்றும் டுடே கிரைம் நியூஸ் போன்ற வெளியீடுகளில் ஒவ்வொருமாதமும் வெளியாகிக்கொண்டிருக்கின்றன . இதுவரை இவர் 700 சிறுகதைகள் , 340 நாவல்கள் மற்றும் 105 தொடர்களை எழுதியுள்ளார் .இவரது பல படைப்புக்கள் மின் நூலாக கிடைக்கிறது .

நாவல்கள்

  • எங்கே என் கண்ணன்
  • கல்லுக்குள் புகுந்த உயிர்
  • அவள் ஒரு சாவித்திரி
  • ஸ்ரீ புரம்
  • அபயமல்லி
  • நீலக்கல் மோதிரம்
  • சொர்ணஜாலம்
  • உன்னை கைவிடமாட்டேன்
  • நந்தி ரகசியம்
  • சதியை சந்திப்போம்
  • தேவர் கோயில் ராஜா
  • மாய விழிகள்
  • மாயமாகப் போகிறார்கள்
  • துள்ளி வருகுது
  • நாக பஞ்சமி
  • கண் சிமிட்டும் இரத்தினக்கல்
  • தங்கக்காடு காற்று காற்று உயிர்
  • தோண்டத் தோண்டத்தங்கம்
  • அஞ்சு வழிமூணு வாசல்
  • உஷ்
  • மகாதேவ ரகசியம்
  • சுற்றி சுற்றி வருவேன்
  • காற்றாய் வருவேன்
  • கோட்டைபுரத்து வீடு
  • ரகசியமாய் ஒரு ரகசியம்
  • சிவா ஜெயம்
  • திட்டி வாசல் மர்மம்
  • வைர பொம்மை
  • காதல் குத்தவாளி
  • அசுரர் ஜாதகம்
  • வைரம் வைரம் வைரம்
  • கிருஷ்ண தந்திரம்
  • பெண்மனம்
  • பேனா உளவாளி
  • ஜீவா என் ஜீவா
  • சொர்ண ரேகை
  • விடாது கருப்பு
  • இயந்திர பார்வை
  • வானத்து மனிதர்கள்
  • ருத்ர வீணை பகுதி 1,2,3 & 4
  • விக்ரமா விக்ரமா பகுதி 1 & 2
  • கன்னிகள் ஏழு பேர்
  • ஆயிரம் அரிவாள் கோட்டை
  • தேடாதே தேடாதே தொலைந்து போவாய் பகுதி 1 & 2
  • சிவமயம் பகுதி 1 & 2
  • விரல் மந்திரா
  • நான் ராமசேஷன் வந்திருக்கேன்
  • ஒளிவதற்கு இடமில்லை
  • அது மட்டும் ரகசியம்
  • பல்லவன் பாண்டியன் பாஸ்கரன
  • மேலே உயரே உச்சியிலே பகுதி 1 & 2
  • நாகப்படை
  • மாயமாய் சிலர்
  • மாய வானம்
  • ரங்கா நீதி
  • அப்பாவின் ஆத்மா
  • சீதா ரகசியம்
  • காற்றோடு ஒரு யுத்தம்
  • நாக வனம்
  • முதல் சக்தி
  • இரண்டாம் சக்தி
  • மூன்றாம் சக்தி
  • நான்காம் சக்தி
  • ஐந்தாம் சக்தி
  • ஆறாம் சக்தி
  • ஏழாம் சக்தி
  • எட்டாம் சக்தி
  • ஆகாயம் காணாத நட்சத்திரம்
  • ஆசை நெசவு
  • ஆத்மா
  • ஆசை ஊஞ்சல்
  • அபாய தென்றல்
  • அங்கே நான் நலமா
  • திக் திக் திக்
  • திவ்ய ரோஜாத்தோட்டம்
  • என் பெயர் ரெங்கநாயகி
  • என்னோடு வா
  • அதை மட்டும் சொல்லாதே

தொலைக்காட்சித்தொடர்கள்

  • என் பெயர் ரெங்கநாயகி
  • விடாது கருப்பு
  • மர்ம தேசம்
  • ருத்ர வீணை
  • சிவமயம்
  • சொர்ண ரேகை
  • எதுவும் நடக்கும்
  • மாய வேட்டை
  • யாமிருக்க பயமேன்
  • அத்தி பூக்கள்
  • ருத்ரம்
  • கோட்டைபுரத்து வீடு
  • மந்திர வாசல்
  • நாகம்மா
  • கங்கா
  • சுப்பிரமணியபுரம்
  • புகுந்த வீடு
  • கிருஷ்ண தாசி
  • அது மட்டும் ரகசியம்

திரைப்படங்கள்

  • சிருங்காரம் (2007)
  • ஆனந்தபுரத்து வீடு (2010)
  • இருட்டு (2019)

மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

கிருஷ்ண தாசி , கால பைரவ ரகசியம் போன்ற படைப்புக்கள் இந்தி மொழியில் தொலைக்காட்சித்தொடர்களாக வெளிவந்துள்ளன .

விருதுகள்

  • இந்திரா சௌந்தர்ராஜன் எழுதிய என் பெயர் ரெங்கநாயகி என்னும் படைப்பு தமிழ் வளர்ச்சித்துறையின் 1999 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான மூன்றாம் பரிசினை பெற்றுள்ளது .
  • சிருங்காரம் என்ற திரைப்படம் 2007 க்கான தேசிய விருது , மைலாப்பூர் அகாடமி விருது , ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா விருது மற்றும் தமிழ்ச்சங்கம் விருதுகளைப்பெற்றுள்ளது .

இலக்கிய முக்கியத்துவம்

இந்திரா சௌந்தர்ராஜன் கதைகள் மர்மம் மற்றும் அமானுஷ்ய வகையைச் சார்ந்தவை .அவருடைய சித்தர்கள் பற்றிய கதைகளெல்லாம் கற்பனையாக புனைவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை . அவரது படைப்புக்கள் வெகுஜன மக்களை கவர்ந்து ,வெகுஜன அங்கீகாரத்தில் வெற்றி பெற்று இன்றும் பேசப்படும் இடத்தில் இருப்பவை .

உசாத்துணை

இந்திரா சௌந்தர்ராஜனின் நாவல்கள்