கிளாரிந்தா

From Tamil Wiki

கிளாரிந்தா ( ) அ.மாதவையா எழுதிய ஆங்கில நாவல். திருநெல்வேலியில் வாழ்ந்த ஒரு பெண்மணியின் வாழ்க்கையை அடியொற்றி எழுதப்பட்டது. இதன் தமிழ் மொழியாக்கம் சரோஜினி பாக்கியமுத்துவால் செய்யப்பட்டது.

எழுத்து, வெளியீடு

அ.மாதவையா எழுதிய மூன்றாவது ஆங்கில நாவல். முதல் நாவல் தில்லை கோவிந்தன் ( 1903) அடுத்த நாவல் சத்தியானந்தன் (1909). கிளாரிந்தா நாவலை அ.மாதவையா 1915ல் எழுதினார். வி.எஸ்.ஸ்ரீனிவாச சாஸ்திரிக்கு கிளாரிந்தா சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

மொழியாக்கம்

1976 ல் கிளாரிந்தா நாவலை சரோஜினி பாக்கியமுத்து மொழியாக்கம் செய்து கிறிஸ்தவ இலக்கிய சங்கம் (CLS)வெளியிட்டது. அ.மாதவையாவின் மகனும் முன்னாள் சென்னை உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதியுமான மா.அனந்த நாராயணன் முன்னுரை எழுதியிருந்தார்..

கதைச்சுருக்கம்