வி. விசாலாட்சி அம்மாள்
வி. விசாலாட்சி அம்மாள் சிறுகதையாசியர், கட்டுரையாளர். "மூன்றில் எது?” முக்கியமான சிறுகதை.
வாழ்க்கைக் குறிப்பு
அ. மாதவையா -ன் ஐந்து மகள்களில் ஒருவர். உடன்பிறந்த சகோதரர்கள் மூன்று பேர். 1912-ல் விஸ்வநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். விஸ்வநாதன் அக்காலத்தின் புகழ்பெற்ற நீதிபதி டி. சதாசிவ ஐயர்-மங்களம் அம்மாளின் மகன்.
இலக்கிய வாழ்க்கை
”மூன்றில் எது?” சிறுகதையை 1924-ல் பஞ்சாமிர்தம் (இதழ்)ல் எழுதினார். எம். லஷ்மி அம்மாள் கலைமகள் இதழின் கெளரவ ஆசிரியர்களுள் ஒருவராக இருந்தபோது விசாலாட்சி அம்மாள் அவ்விதழில் மாதர் பகுதியில் கட்டுரைகள், குறிப்புகள், துணுக்குகள் எழுதினார். ‘காசினி’ என்ற பெயரில் சுதேசமித்ரன் இதழில் பல கட்டுரைகள் எழுதினார். ஆனந்தபோதினி இதழிலும் ’காசினி’ என்ற பெயரில் சிறுகதைகள் வெளியாகின. மாதவையாவின் மகன்கள், மகள்கள் எழுதிய சிறுகதைகளைத் தொகுத்து ‘முன்னிலா’ என்ற தொகுப்பாக தினமணி காரியாலயம் 1944-ல் நூல் வெளியிட்டது.
உசாத்துணை
- “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.