பரம்பரை ஆண்டியோ பஞ்சத்துக்கு ஆண்டியோ

From Tamil Wiki
ச.ம. நடேச சாஸ்திரி

பரம்பரை ஆண்டியோ பஞ்சத்துக்கு ஆண்டியோ ச.ம. நடேச சாஸ்திரி எழுதிய சிறுகதை. அரசுகள் ஒடுங்கி, சமஸ்தானம் குறுகி, ஜமீன்களின் செல்வாக்குகள் படிப்படியாக குறைந்த காலகட்டத்தைச் சேர்ந்த கதை.

எழுத்து, வெளியீடு

1897-ல் வெளியான திராவிட மத்திய காலக் கதைகள் தொகுப்பில் உள்ளது.

கதைச்சுருக்கம்

மைசூர் சமஸ்தான அரசன் சாமுண்டன் தனது ஆஸ்தான வைதீகரான குண்டப்பன் மீது மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் கொண்டவன். வைதீக விருப்பப்படி அவன் விரும்பிய தாசில் வேலையை அவனுக்கு மன்னன் அளிக்கிறான். அதன் பிறகு என்ன ஆனது என்பதை நகைச்சுவையுடன் சொல்லிச் செல்லும் சிறுகதை.

இலக்கிய இடம்

அரசு நிர்வாகம் அக்காலத்தில் எப்படி இயங்கியது என்பதற்கும், மக்களின் நம்பிக்கைகளும், பழக்க வழ்க்கங்களும், உயரதிகாரிகள் மீது அவர்கள் கொண்டிருந்த மதிப்பும் அச்சமும் எப்படி இருந்தன என்பதற்கான சான்றாக இக்கதை அமைகிறது.

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.
  • http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12899