தாமஸ் புரூய்க்ஸ்மா

From Tamil Wiki
Revision as of 10:22, 7 May 2022 by Jeyamohan (talk | contribs)
புரூய்க்ஸ்மா

தாமஸ் புரூய்க்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) அமெரிக்க தமிழறிஞர். ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். திருக்குறளை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தவர்.

PRUIKSMA

வாழ்க்கை

தாமஸ் ஹிடோஷி புரூய்க்ஸ்மா அமெரிக்கத் தமிழறிஞர். பன்மொழி அறிஞர். 1998ல் தன் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தமிழகத்தில் மதுரை அருகே ஒரு சிற்றூரில் தங்கி பேராசிரியர் கே.வி.ராமகோடியிடம் தமிழ் பயின்றார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார்.

புருய்க்ஸ்மா National Endowment for the Arts, 4Culture, Artist Trust, and the U. S. Fulbright Program போன்ற அமைப்புகளின் நிதியுதவியுடன் மொழிகள் கற்பது, மொழியாக்கம் செய்வது, மேடைகளில் கவிதை நிகழ்வுகளை நடத்துவது ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது ஸ்பானிஷ் மொழியிலிருந்து பெட்ரோ பரோமா நாவலை மொழியாக்கம் செய்கிறார். முந்தைய மொழியாக்கம் சரியானபடி அமையவில்லை என்று கருதும் புரூய்க்ஸ்மா பண்பாட்டுக் குறிப்புகளை ஆராய்ந்து தன் மொழியாக்கத்தை நிகழ்த்தி வருகிறார்.

நூல்கள்

  • The Safety of Edges (poems)
  • Give, Eat, and Live: Poems of Avvaiyar (translated from the Tamil)
  • Body and Earth (with the artist C.F. John)

உசாத்துணை