பிரெண்டா பெக்

From Tamil Wiki

பிரெண்டா பெக் ( Dr. Brenda E.F. Beck ) (1940),கனடாநாட்டு மானுடவியலாளர். தமிழ்நாட்டில் கொங்கு வட்டார நாட்டார் பண்பாட்டை ஆய்வுசெய்தவர். அண்ணன்மார் சாமி கதை என்னும் நாட்டார் காவியத்தை முழுமையாக பதிவுசெய்து ஆய்வுக்குறிப்புகளுடன் பதிப்பித்தவர். எட்டு நூல்களும் அறுபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளும் எழுதி தமிழ்ப்பண்பாட்டின் அடிப்படைகளை உலக அளவில் அறிமுகம் செய்தவர். கனடாவில் தமிழ் பண்பாட்டுச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுபவர்.

பிறப்பு, கல்வி

பிரெண்டா கனடாவில் 1940ல் பிறந்தார். அவருக்கு 14 வயதிருக்கையில் லெபனான் நாட்டில் பெய்ரூட் நகரில் பணியாற்றிய அவருடைய தந்தை குடும்பத்துடன் சிரியா, லெபனான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் , இந்தியா ஆகிய நாடுகளுக்கு பயணமாக அழைத்துச்சென்றார். . திருச்சியில் இருந்து கோயம்புத்தூருக்கு செய்த ஒரு பயணம் தமிழ்ப்பண்பாட்டுடன் அவருடைய முதல் அறிமுகம். 1964ல் பிரெண்டா ஆக்ஸ்ஃபோர்ட் சாமர்வெல் கல்லூரி (Somerville College, Oxford)யில் மானுடவியலில் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்வதற்காக தமிழகம் வந்தார். கோவை அருகே ஓலப்பாயம் என்னும் ஊரில் தங்கி தமிழ் பயின்றார். தமிழ்ப்பெண்கள் போல நகைகளும் புடவையும் அணிந்து தமிழ் கிராமத்தின் ஓர் உறுப்பினராகவே ஆனார்.

அண்ணன்மார் சுவாமி கதை

பிரெண்டா 1965ல் கிராமத்துப் பாடகர்கள் அண்ணன்மார் சுவாமி கதையை பாடுவதை கேட்டார்.பொன்னர் -சங்கர் கதை என இன்று அறியப்படும் அந்த நாட்டார்க்காவியம் அப்போது பலர் சேர்ந்து பலநாட்கள் தொடர்ச்சியாக பாடுவதாக இருந்தது. பொது பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கருதப்படும் அண்ணன்மார் சுவாமி கதை பாட்டு, நடனம், கூத்து என பலவடிவங்களில் கொங்கு கிராமங்களில் அவர்களின் குலக்கதையாக ஓர் இதிகாச தகுதியுடன் புழங்கியது

பிரெண்டா அண்ணன்மார் சுவாமி கதையை ஒலிப்பதிவு செய்தார். 18 இரவுகளிலாக மொத்தம் 38 மணிநேரம் இந்த ஒலிப்பதிவு நீடித்தது. பிரெண்டா இருபதாயிரம் பக்கங்கள் அளவுக்கு நாட்டார் கதைகளை கொங்கு வட்டாரத்தில் இருந்து சேகரித்தார். “அற்புதமான அனுபவம். நான் பதிவுசெய்துகொண்டே இருந்தேன். டேப் தீர்ந்தபோது நான் சேகரித்திருந்த வட அமெரிக்க நாட்டார் பாடல்களை அழித்து அவற்றின்மேல் பதிவுசெய்தேன்’ என்று பிரெண்டா கூறினார்

1992ல் பிரெண்டா கனடா நாட்டு இந்தியரும் ஓவியருமான ரவிச்சந்திரன் ஆறுமுகம் உதவியுடன் அண்ணன்மார் சுவாமி கதையை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஓவியங்களுடன் வெளியிட்டார். பதிமூன்று மணி நேரம் ஓடக்கூடியதும் இருபத்தாறு பகுதிகள் கொண்டதுமான காணொளி தொடர் ஒன்றை அண்ணன்மார் சுவாமி கதையை ஒட்டி உருவாக்கினார்.

In 1992, along with Indo-Canadian animator and artist Ravichandran Arumugam, whose grandfather used to sing the legend, Beck helped translate and create an illustrated two-volume book of the Annamaar Kadhai in Tamil and English. She also created graphic novels and a thirteen-hour, twenty-six episode animated series for children regarding the epic, known as the Elder Brothers' Story: An Oral Epic of Tamil, also known as The Legend of Ponnivala or Ponnar Shankar. They were published by the Institute of Asian Studies, Chennai. There is now an online version available that provides activities for kids such as coloring books and audiobooks to "intended to entertain as well as to educate".

Beck helped develop an app to teach Tamil to students in Toronto, which has a large population of Tamil Indians. The app took eight months to develop and was released in 2016. In the same year, Beck donated $10,000 to Tamil Studies at the University of Toronto.

Then, in 2018, Beck created two funds known as the Brenda Beck Tamil Programming Fund and the Brenda Beck Tamil Digital Fund. These were created to "invest and distribute funds to programming and the digitization of archives". Beck also donated a $327,000 gift to support these programs. Later that year, on September 1st and 2nd, Beck hosted the Family Reunion of the Kongu Association in Manassas, Virginia. Beck spent time lecturing about the Annamaar Kadhai, describing its origins, and comparing it to other folk tales in the Kongu Nadu region.

Beck continues to research the Tamil Diaspora or the migration of Tamil Indians throughout the globe. Scarborough has one of the largest populations of Tamil Indians outside of South Asia.

Currently, Beck serves as president of the Sophia Hilton Foundation of Canada, a charity that "promotes the use of storytelling at all educational levels". Beck hopes that with the work of the University of Toronto Scholars and input of the Scarborough Tamil community, there will be further strides in Tamil research and cultural preservation. She also hopes to bring the tale of Ponnivala and thus Tamil culture into classrooms for increased accessibility for young students.

In 2019, with Beck's assistance and input, the University of Toronto at Scarborough's held its first Tamil Heritage Month celebration. The performance was unique in that it was performed as a Villu Paattu, which translates to "bow-song". It is described as a "musical technique that combines narration and a 10-foot bow-string struck for rhythm".

Eighteen (18) performers made history by illustrating parts of the legend. It was the first time two ancient Tamil arts came together – an ancient tale told in a musical storytelling form too old to accurately date. Beck says about the story, "It is something that should be shared internationally, and it's something that Tamils can be proud of".