first review completed

கூடலூர் கிழார்

From Tamil Wiki
Revision as of 17:56, 4 May 2022 by Logamadevi (talk | contribs)

கூடலூர் கிழார் சங்க காலப் புலவர். இவர் பாடிய நான்கு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

மலை நாட்டில் பொறை நாட்டுப் பாலைக்காட்டு வட்டத்து நடுவட்டம் என்ற ஊரிலுள்ள கூடலூரில் பிறந்ததால் கூடலூர் கிழார் என்றழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

இவரின் நான்கு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. குறுந்தொகையில் (166, 167, 214) மூன்று பாடல்களும், புறநானூற்றில் (229) ஒரு பாடலும் இவர் பாடியது. யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றிய செய்திகள் இவரின் பாடல்கள் வழி அறியலாம்.

பாடல் நடை

  • புறநானூறு: 229

ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காயப்,
பங்குனி உயர் அழுவத்துத்,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன்எதிர் ஏர்தரத்,
தொல் நாள்மீன் துறை படியப்,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது
அளக்கர்த் திணை விளக்காகக்,
கனைஎரி பரப்பக், கால்எதிர்பு பொங்கி,
ஒருமீன் விழுந்தன்றால், விசும்பி னானே

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.