under review

முரீது

From Tamil Wiki
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முரீது: இஸ்லாமிய மதநம்பிக்கையில் ஒரு பாதை. இது பொதுத்தொழுகை, நோன்புகள் ஆகியவற்றுக்குக் கூடுதலாக தனிப்பட்ட ஆன்மிகத் தேடல் கொண்டிருத்தல், உகந்த மெய்யாசிரியரிடம் ஞானச்சொல் பெற்றுக்கொள்ளுதல், மறைஞானச் சடங்குகள் செய்தல், தியானமுறைகள் ஆகியவை கொண்டது.

கலைச்சொல்

முரீது என்ற வார்த்தை நாட்டம் என்னும் பொருள் கொண்ட இராதத் என்ற அரபுச்சொல்லில் இருந்து வந்தது. முரீது என்றால் நாடக் கூடியவர் என்பது நேர்ப்பொருள். இறைநாட்டம், மீட்பில் நாட்டம் கொண்டவர் முரீது எனப்படுகிறார். குர்ஆன் யுரீதுத் துன்யா (உலக நாட்டம் கொண்டவர்) யுரீதுல் ஆஹிரா ( மறுமையை நாடுபவர்) யுரீது வஜ்ஹஹு (இறைவனை மட்டுமே நாடுபவர்) என மூன்று வகையினரை குறிப்பிடுகிறது என்றும் மூன்றாவது தரப்பினர் முரீது என அழைக்கப்படுகிறார்கள் என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:02 IST