விஷ்ணுபுரம்- குமரகுருபரன் விருது

From Tamil Wiki

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது: விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் மறைந்த கவிஞர் குமரகுருபரன் பெயரால் வழங்கும் இலக்கிய விருது. இளங்கவிஞர்களுக்கான விருது இது

தொடக்கம்

கவிஞர் குமரகுருபரன் ஜூன் 19,2016-ல் மறைந்தார். அவர் பெயரால் ஓர் இலக்கியவிருது வழங்கவேண்டும் என்று அவருடைய நண்பர் கவிதா சொர்ணவல்லி விரும்பியதன் பேரில் இவ்விருது ஏற்பாடு செய்யப்பட்டது. 2017 முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இளங்கவிஞர்களுக்கான விருது இது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இவ்விருதை வழங்குகிறது.

விருது

இவ்விருது ரூபாய் ஐம்பதாயிரமும் , சிற்பமும் அடங்கியது. ஆண்டுதோறும் குமரகுருபரனின் பிறந்தநாளான ஜூன் 10 ஐ ஒட்டி சென்னையில் நிகழும் விழாவில் விருது அளிக்கப்படுகிறது

விருதுபெற்றோர்

உசாத்துணை

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருதுகள்