first review completed

ஆர்க்காடுகிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்

From Tamil Wiki
Revision as of 09:43, 27 April 2022 by Logamadevi (talk | contribs)

ஆர்காடுகிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார் சங்க காலப் புலவர். இவர் பாடிய பாடல் ஒன்று அகநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

அத்தன் என்பது புலவர் பெயர். இப்புலவரது விழி சற்று வெண்மையாக இருந்ததால் இவரை வெள்ளைக்கண் அத்தனார் என்றனர். வடஆர்க்காடு மாவட்டத் தலைநகராகிய வேலூர்க்குக் கிழக்கே பாலாற்றங்கரையில் அமைந்த ஆர்காட்டில் பிறந்தார். கிழார் என்பது அரசர் அளித்த சிறப்புப் பெயர்.

இலக்கிய வாழ்க்கை

முல்லைத்திணைப் பாடலான அகநானூற்றுப் பாடல்(64) இவர் பாடியது. தலைவியைப் பிரிந்த தலைவன் பாடிய அகத்துறைப்பாடலாக உள்ளது.

பாடல் நடை

  • அகநானூறு பாடல் 64

களையும் இடனால் பாக! உளை அணி
உலகு கடப்பன்ன புள் இயற் கலி மா
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய,
தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி,
ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ்
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக,
செலவு நாம் அயர்ந்தனம்ஆயின், பெயல
கடு நீர் வரித்த செந் நிலமருங்கின்,
விடு நெறி ஈர் மணல், வாரணம் சிதர,
பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி,
மண்ணுடைக் கோட்ட அண்ணல் ஏஎறு
உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ,
ஊர்வயின் பெயரும் பொழுதில், சேர்பு உடன்,
கன்று பயிர் குரல, மன்று நிறை புகுதரும்
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை
புலம்பு கொள் மாலை கேட்டொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.