first review completed

சே. சுந்தரராசன்

From Tamil Wiki
Revision as of 13:08, 23 April 2022 by Logamadevi (talk | contribs)
புலவர் சே. சுந்தரராசன்

சே. சுந்தரராசன் (பிறப்பு: மே 07, 1930) உரையாசிரியர், புலவர்.

பிறப்பு, கல்வி

புலவர் சே. சுந்தரராசன் மே 07, 1930- அன்று திருவள்ளுவர் மாவட்டம் பள்ளிப்பட்டி அடுத்த ஈச்சம்பாடி என்னும் சிற்றூரில் தாசன் - வேதமணி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். தொடக்கக் கல்வியை ஈச்சம்பாடியிலும், நடுநிலைக் கல்வியை பள்ளிப்பட்டியிலும் படித்தார். சோளிங்கரில் (சோழிங்கபுரம்) ஆசிரியர் பயிற்சி பெற்று 1948 -ல் அதே ஊரில் உள்ள குட்லக் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.

அரக்கோணம் தூய ஆண்ட்ரு பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தனி வாழ்க்கை

1949-ம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு எழுதி முதல் வகுப்பில் வெற்றிபெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் வித்துவான் தேர்வெழுதி (1957) புலவர் பட்டம் பெற்றார்.

உரையாசிரியர் பணி

தன் பணி காலத்தில் கிறிஸ்துவ சமய நூல்களுக்கு உரை எழுதும் பணியில் ஈடுபட்டார். கிறிஸ்துவ சமய நூல்களுக்கு உரை எழுதி அந்நூல்கள் மக்களிடம் பரவலாக காரணமாக அமைந்தார்.

உரை நூல்கள்
  • தேம்பாவணி உரைநடை
  • இரட்சண்ய மணோகரம் தெளிவுரை
  • இரட்சண்ய யாத்ரீகம் உரைநடை சுருக்கம்
  • குடும்பவிளக்கு உரை
  • சிலுவைப்பாடு உரையுடன்
  • பெத்லகேம் குறவஞ்சி - உரையுடன்
  • திருக்காவலூர்க் கலம்பகம் - உரையுடன்
  • தேம்பாவணி (மூன்று காண்டம் - 3615 பாடல்கள்) உரை
  • இரட்சணிய யாத்திரிகம் (5 பருவம் - 3766 பாடல்கள்) உரை
  • பாண்டியன் பரிசு - உரை
  • புதிய ஏற்பாடு ஓர் அறிமுகம்
  • பழைய ஏற்பாடு ஓர் அறிமுகம்
  • மாணவர்களுக்கு
  • குறள்நெறிக் கதைகள்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.