under review

ஹென்றி இர்வின்

From Tamil Wiki
Revision as of 23:49, 1 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
ஹென்றி இர்வின்

ஹென்றி இர்வின் (1841-1922) ஆங்கிலேய கட்டிடச் சிற்பி. இந்தோ-சாரசனிக் மரபைச் சேர்ந்தவை என வகுக்கப்படும் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்துக் கட்டிடங்கள் பலவற்றை வடிவமைத்தவர். கட்டிடப்பொறியாளர் நிறுவன உறுப்பினர். அரசி விக்டோரியாவின் (1888) பிறந்தநாள் அரசு மரியாதையை பெற்றவர்.

வாழ்க்கை

ஹென்றி இர்வின் ஆங்கிலிகன் சபையின் போதகரான அயர்லாந்தைச் சேர்ந்த ஹென்றி இர்வின் (சீனியர்) இன் மூத்தமகன். மூன்று தம்பிகளும் இரண்டு தங்கைகளும் இருந்தனர். அவர் தந்தை அயர்லாந்தில் எல்ஃபின் எனும் ஊரில் ஆர்ச்டீக்கனாக இருந்தார் ஹென்றி இர்வின் இந்திய பொதுப்பணித்துறையில் 1886-ல் இணைந்தார். பெரும்பாலும் தென்னிந்தியாவில் பணியாற்றினார்.

கட்டிடங்கள்

  • மைசூர் மகாராஜா அரண்மனை
  • விக்டோரியா லாட்ஜ் சிம்லா (இப்போது Indian Institute of Advanced Study)
  • வைஸ் ரீகல் லாட்ஜ் சிம்லா (இப்போது Indian Institute of Advanced Study)
  • மதுரை அமெரிக்கன் கல்லூரி மையக்கட்டிடம்
  • கெயிட்டி அரங்கு சிம்லா
  • சென்னை செண்ட்ரல் ரயில்நிலையம்
  • சென்னை எக்மூர் அருங்காட்சியகம்
  • சென்னை சட்டக்கல்லூரி கட்டிடம்
  • சென்னை தென் மராத்தா ரயில்வே
  • சென்னை உயர்நீதிமன்றம்
  • சென்னை பொது நூலகம்(கன்னிமாரா நூலகம்)
  • சென்னை ஸ்டேட்பேங்க் ஆஃப் இந்தியா தலைமையலம்
  • சென்னை ஹிந்து உயர்நிலைப்பள்ளி


✅Finalised Page