first review completed

மு.ராஜேந்திரன்

From Tamil Wiki
Revision as of 19:11, 19 April 2022 by Logamadevi (talk | contribs)

மு. ராஜேந்திரன்: தமிழ் நாவலாசிரியர், வரலாற்று ஆய்வாளர், பதிப்பாளர். தமிழகச் செப்பேடுகள் பற்றிய ஆய்வுகளை செய்திருக்கிறார். ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளை பதிப்பித்தார். இந்திய ஆட்சிப்பணி அதிகாரி.

பிறப்பு, கல்வி

மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் வட்டம் வடகரை கிராமத்தில் ராஜேந்திரன் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சட்ட மேற்படிப்பும் முடித்துள்ளார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் திருக்குறளில் சட்டக் கூறுகள் குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். வரலாற்றை ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்து படித்து இந்திய ஆட்சிப்பணியாளராக பொறுப்பேற்றார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் தற்போது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையராக பணிபுரிந்து வருகிறார்.

விருதுகள்    

  • 1801 - நூலுக்காக மலேசியா கூட்டுறவு நிலநிதி கூட்டுறவுச் சங்கம் வழங்கும் டான்ஸ்ரீ சோமா விருது. விருதுத் தொகை பத்தாயிரம் அமெரிக்க டாலர் (ரூ 7 லட்சம்) - 2018
  • கவிதை உறவு - முதல் பரிசு - 2017
  • கவிமுகில் அறக்கட்டளை பரிசு - 2017
  • தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் கழகத்தின் சிறந்த நாவலுக்கான விருது - 2017
  • வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நூலுக்காக   SRM பல்கலைக்கழகம் வழங்கும் புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது. பரிசுத் தொகை ரூ. 1,50,000
  • கோவை மா.பொ.சி. சிலம்புச் செல்வர் இலக்கிய விருது - 2015
  • பாண்டியர் காலச் செப்பேடுகள் நூலுக்காக  தமிழக அரசின்  சிறந்த நூல் பரிசு - 2013
  • சோழர் காலச் செப்பேடுகள் நூலுக்காக கலை மேம்பாட்டு உலகப் பேரவை (நாகர்கோவில்) வழங்கிய தினமலர் இராமசுப்பையர் வரலாற்று நூல் விருது - 2012
  • கவிதை உறவு சிறந்த வரலாற்று நூல் விருது - 2011
  • கம்பம் பாரதித் தமிழ்ச் சங்க விருது - 2012, 2016

நூல்கள்

நாவல்கள்
  • மதாம் - 2021
  • காலாபாணி - 2021
  • வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு - 2014
  • 1801 (நாவல்) - 2016
கதைகள்
  • செயலே சிறந்த நூல் - 2018
  • வெயில் தேசத்தில் தேசம் - 2018
  •  கம்பலை முதல் - 2015 (கவிஞர் அ.வெண்ணிலாவுடன் இணைந்து)    
  • பாதாளி (சிறுகதைகள்) - 2016
  • யானைகளின் கடைசி தேசம் - 2018
வரலாறு
  • பல்லவர் செப்பேடுகள் - 2015
  • சேரர் செப்பேடுகள் - 2015
  • பாண்டியர் காலச் செப்பேடுகள் - 2012
  • சட்ட வல்லுநர் திருவள்ளுவர் - 2011   
  • சோழர் காலச் செப்பேடுகள் - 2011   
தொகுத்த நூல்கள்
  • ’வந்தவாசிப் போர் - 250’ - 2010 (கவிஞர் அ. வெண்ணிலாவுடன் இணைந்து)
  • திருவண்ணாமலை - 2009
  • மகாமகம் - 1995
  • காவிரி தந்த கலைச் செல்வம்- 1992
பதிப்பு
  • ஆனந்த ரங்கப்பிள்ளை தினப்படி சேதிக் குறிப்பு (12 தொகுதிகள்)
மொழி பெயர்ப்பு
  • இந்திய பழங்குடிகளின் வாழ்க்கை  (ஆங்கிலத்திலிருந்து)


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.