under review

வ.சுப்பையா பிள்ளை

From Tamil Wiki
Revision as of 23:16, 1 May 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Reviewed by Je)
வ.சுப்பையா பிள்ளை

வ.சுப்பையா பிள்ளை (செப்டெம்பர் 22, 1897 - ஜனவரி 24, 1983) தென்னிந்திய திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் என்னும் நூல் வெளியீட்டகத்தின் நிறுவனர்களில் ஒருவர். அதன் இரண்டாவது மேலாண்மை இயக்குநர். தமிழறிஞர், தனித்தமிழியக்கச் செயல்பாட்டாளர்.

பிறப்பு, கல்வி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த வயிரமுத்து சுந்தரத்தம்மையார் இணையருக்கு செப்டெம்பர் 22, 1897-ல் நான்காவது மகனாகப் பிறந்தார் சுப்பையா பிள்ளை. இவர் தமையன் வ.திருவரங்கம் பிள்ளை. பாளையங்கோட்டையில் பயின்று பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாண்டுகள் கற்று இடைநிலை வகுப்பில் தேர்ச்சியடைந்தார்.

தனிவாழ்க்கை

திருவரங்கம் பிள்ளை மறைமலையடிகள் மகள் நீலாம்பிகையைத் திருமணம் செய்து கொண்டார். சுப்பையா, மங்கையர்க்கரசி அம்மையாரை மணந்தார் அண்ணன் திருவரங்கன் 1944-ஆம் ஆண்டு காலமாகிவிட்டார்.

திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

சுப்பையா பிள்ளையின் தமையன் திருவரங்கம் பிள்ளை இலங்கையில் தமது வணிகத்துடன் புத்தக விற்பனை நிலையத்தையும் நடத்தி வந்தார். அவர் தாயகம் திரும்பி வந்த பின்னர் நெல்லையிலும், சென்னையிலும் திருசங்கர் புத்தக விற்பனை நிலையங்களைத் திறந்தார். 1920-ல் அந்நிறுவனம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகமாக உருவானது.சென்னை புத்தக விற்பனை நிலையத்தை சுப்பையா கவனித்துக் கொண்டார். தமையனின் இறப்புக்குப் பின் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை தானே நடத்தினார்

விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது (1969)
  • ‘பேரவைச் செம்மல்’ விருது - மதுரைக் காமராசர் பல்கலைக் கழகம்

மறைவு

எண்பத்து ஐந்தாவது வயதில் ஜனவரி 24,1983- ல் காலமானார்.

உசாத்துணை


✅Finalised Page