under review

கோப்பெருஞ்சோழன்

From Tamil Wiki

கோப்பெருஞ்சோழன் சங்க காலப் புலவர்; சோழ மன்னர். குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் இவர் எழுதிய பாடல் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

கோப்பெருஞ்சோழன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த சோழ மன்னர். பிசிராந்தையார் இவரின் நெருங்கிய நண்பர். இவர் காலமானபோது போத்தியார் என்ற புலவரும் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

இலக்கிய வாழ்க்கை

செய்யுள்கள் இயற்றும் திறம் பெற்றிருந்தார். இவர் எழுதிய ஏழு பாடல்கள் சங்க நூல்களான குறுந்தொகையிலும், புறநானூற்றிலும் உள்ளன.

இலக்கிய நண்பர்கள்
  • பிசிராந்தையார்
  • போத்தியார்
  • புல்லாற்றூர் எயிற்றியனார்
  • கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்

பாடல் நடை

  • குறுந்தொகை: 129

எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப
புலவர் தோழ கேளா யத்தை
மாக்கடல் நடுவண் எண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்கும் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே.

  • குறுந்தொகை: 20

அருளும் அன்பும் நீக்கித் துணைதுறந்து
பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக
மடவம் ஆக மடந்தை நாமே.

  • புறநானூறு 215

கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாதொரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண்பூ வெண்தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம்புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் 5
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர்ஓம் புநனே;
செல்வ்க் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன் மன்னே.

  • புறநானூறு 214

`செய்குவம் கொல்லோ நல்வினை!எனவே
ஐயம் அறாஅர், கசடுஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவுஇல் லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே; 5
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசி னோர்க்குச்
செய்வினை மருங்கின் எய்தல் உண்டெனின்,
செய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
செய்யா உலகத்து நுகர்ச்சி இல்லெனின்,
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; 10
மாறிப் பிறவார் ஆயினும், இமையத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்,
தீதில் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே,

உசாத்துணை


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.