standardised

பலபட்டடை சொக்கநாதப்புலவர்

From Tamil Wiki
Revision as of 07:51, 24 April 2022 by Tamizhkalai (talk | contribs)

'பலபட்டடை' சொக்கநாதப்புலவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

இயற்பெயர் சொக்கநாதப்பிள்ளை. இவர் மதுரையை சுற்றியுள்ள வள்ளல்களைப் பாடி, பொருளீட்டி வந்தார். தந்தை பலபட்டடை சொக்கலிங்கம் பிள்ளை. மதுரையை ஆண்ட அரசர்களிடம் பலபட்டடை கணக்கு எனும் அலுவல் பணி செய்தார். இவரது தந்தையும் பலபட்டடை சொக்கநாத கவிராயர் என்ற பெயரிலும் அறியப்படுகிறார்.

பலபட்டடை எனும் முன்னொட்டு இவர்களின் கணக்குத் தொழிலைக் குறிக்கிறது. பலபட்டடை என்றால் பண்டமுள்ள அறை.

சொக்கநாதர் எனும் பெயருடன் பல சமகாலப் புலவர்கள் இருந்ததால் தங்களை வேறுபடுத்திக் கொள்ள இவ்வாறு முன்னொட்டு சேர்க்கும் பழக்கம் இருந்துள்ளது.

இலக்கியப் பங்களிப்பு

மதுரை மும்மணிக்கோவை, மதுரை யமக அந்தாதி, இராமேசுவரத்தைப் பற்றிய தேவை உலா, திண்டுக்கல்லைப் பற்றிய பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது, திருமலிருஞ்சோலை அழகர் கிள்ளைவிடு தூது, வண்டுவிடு தூது, விஞ்சைக்கோவை, நரசிங்க ராயர் வளமடல்  மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.

இவரது சமகால புலவரான சுப்பிரதிப கவிராயருடன் முரண்பாடு கொண்டிருந்தார்.

இருபாகங்களாக வெளிவந்துள்ள தனிப்பாடற்றிரட்டு எனும் நூலில் இவரது தனிப்பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது.

நூல் பட்டியல்

  • மதுரை மும்மணிக்கோவை
  • மதுரை யமக அந்தாதி
  • தேவை உலா
  • பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
  • அழகர் கிள்ளைவிடு தூது
  • வண்டுவிடு தூது
  • தனிப்பாடல்கள்

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.