தெய்வசிகாமணிப் புலவர்
From Tamil Wiki
தெய்வசிகாமணிப் புலவர் தமிழ்ப்புலவர். தனிப்பாடல்கள் பல பாடினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கொங்கு நாடு காஞ்சிக்கோவில் நாட்டில் படைத்தலைவராக இருந்த சின்னார் வேலப்பகவுண்டர் ராவுத்தர் கவுண்டரிடம் புலவராக இருந்தார். காங்கேயம் மன்றாடியாரிடம் சென்று பாடல்கள் பாடினார்.
இலக்கிய வாழ்க்கை
காங்கேயம் மன்றாடியாரிடம் பாடல்கள் பாடினார். கூனம்பட்டி மாணிக்கவாசக மடத்திற்குச் சென்று பாடல்கள் பாடினார். தனிப்பாடல்கள் பல இயற்றினார். நூல்கள் எழுதவில்லை.
பாடல் நடை
கள்ளியெடுத்த கொக்கி கைதனிலே கொண்டுவர
வெள்ளி இருசாம வேளைதனில் தெள்ளுதமிழ்
காட்டக் குமாரசெய காங்கயமன் றடியார்
நாட்டமற வூட்டமெடுத் தேன்
உசாத்துணை
⨮ Standardised
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.