second review completed

புகழ்சூடி

From Tamil Wiki
Revision as of 00:24, 16 July 2024 by Jayashree (talk | contribs)
புகழ்சூடி

புகழ்சூடி (2016) ஔவையாரின் ஆத்திசூடியை அடியொற்றி இயற்றப்பட்ட நீதி நூல். இதனை இயற்றியவர் கவிஞர் தமிழ்ப் பெரியசாமி.

வெளியீடு

புகழ்சூடி நூலை ஏகம் பதிப்பகம், 2016-ல் வெளியிட்டது.

ஆசிரியர்

'புகழ்சூடி' நூலின் ஆசிரியர் தமிழ்ப் பெரியசாமி. தமிழாசிரியர், கவிஞர். நல்லாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர்.

நூல் அமைப்பு

புகழ்சூடி நூலில் ஓரடிப் பாடல்களாக 96 பாக்கள் இடம் பெற்றன. நூல் பற்றி ஆசிரியர் தமிழ்ப் பெரியசாமி, நூலின் முகவுரையில் “புகழ்சூடி என்னும் நூல் ஆத்திசூடிப் பாவடியில் அமைந்த அறிவுரை நூல். இதில் காலத்திற்கேற்ப புதிய கருத்துக்கள் பலவும் வலியுறுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.

உள்ளடக்கம்

புகழ்சூடி நூல் அகர வரிசையில் ‘அரிமாத் திறன் கொள்' என்று தொடங்கி ’'வையம் உனதறி' என்ற அடியுடன் நிறைவடைகிறது.

பாடல் நடை

அரிமாத் திறன் கொள்
..
கணிப்பொறி கற்றிடு
...
தூக்கம் அளவு செய்
..
நேற்றிலும் உயர்வாய்
நோக்கம் உயர்வு செய்
பிழை கண்டு ஆர்த்தெழு
பூக்களைப் படித்தல் செய்
பெற்றோரைப் பேண்
மொழி பல பயில்
விதியென ஒடுங்கேல்
வெற்றியில் பணிவு கொள்
வையம் உனதறி

மதிப்பீடு

புகழ்சூடி நூல் ஆத்திசூடி, புதிய ஆத்திசூடி வரிசையில் சிறார்களுக்கு, இளையோர்களுக்கு அறிவுரை கூறும் அற நூலாக அறியப்படுகிறது.

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.